2023 செப்டெம்பர் 28, வியாழக்கிழமை

பொது வேட்பாளராகவுள்ள நட்சத்திரம்

Menaka Mookandi   / 2018 ஜூலை 21 , பி.ப. 05:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

இன்னும் ஒன்றரை வருடத்தில் நடைபெறவுள்ள நாட்டின் பெரிய கதிரைக்கான போட்டியில், பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவதற்கான வேலைகளில், சிலர் களமிறங்கி இருக்கிறார்கள். இதற்கு, தூதுவர் ஒருவரும் சம்பந்தப்படுத்தப்பட்டு உள்ளாரெனத் தெரிவிக்கப்படுகிறது.

யானைக் கூட்டத்தின் பின் வரிசை இளம் வயதினர், இந்த வேலைக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனராம். அதேபோன்று, தற்போதுன்ன இரண்டாம் தலைவரை வேட்பாளராக்கும் முயற்சியில் தான், கூட்டத்தின் சிரேஷ்டர்களும் ஈடுபட்டு வருகிறார்களாம்.

இவ்வாறானதொரு நிலையில், மீண்டும் அன்னத்தைக் கூட்டி, பிரசித்தப் பிரபலமொன்றைப் போட்டியில் ஈடுபடுத்த வேண்டுமென, பொது வேட்பாளர் தொடர்பில் சிந்திக்கும் குழுவினர் தெரிவித்து வருகின்றனர்.

இது இவ்வாறிருக்க, 34 இலட்சம் பேஸ்புக் நண்ப​ர்களைக் கொண்டுள்ள ஒருவர், இவர்களது கண்களில் பட்டுள்ளாராம். ஆனால் அவர், அரசியல்வாதி இல்லையாம். அரசியல் தொடர்பு கூட, அவருக்கு இல்லையாம். ஆனால், நாட்டில் மிகவும் பிரசித்தமான குமாரர் என்றுக் கூறப்படுகிறது.

இவர், இந்நாட்டில் பிரசித்தமான விளையாட்டுத் துறையிலிருந்து வந்தவராவார். இலங்கையில் மாத்திரமன்றி, வெளிநாடுகளிலும் இவருக்கு, நல்ல வரவேற்பு உள்ளது.

மொட்டிலிருந்து வரப்போகும் கோட்டாவுக்குப் போட்டியாக, இவரைப் போன்றவர் தான் வேண்டுமென, பலர் கூறி வருகின்றார்களாம். ஆனால் அந்த நட்சத்திரம், இதுவரை தனது விருப்பத்தைத் தெரிவிக்கவில்லை என்று டி​தான் கூறப்படுகிறது.

இவர், தன்னோடு விளையாடிய மற்றொரு நண்பருடன் இணைந்து, ஒருவகை மினிஸ்ட்ரி (அமைச்சு) ஒன்றை நடத்தி, வெற்றிகரமான வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்றாராம். இவ்வளவு காலமும், அரசியலுக்கு அப்பால், விளையாட்டில் மாத்திரம் அக்கறையுடன் இருந்த இவரை, தேர்தல் போட்டியில் களமிறக்கத்தான் இப்போது முயற்சிக்கப்பட்டு வருகிறதாம். இந்த முயற்சி பயனளித்தால், வடக்கு, கிழக்கிலிருந்து மாத்திரமல்ல, அனைத்து இடங்களிலிருந்தும் ஆதரவைத் திரட்டிக்கொள்ளலாமென்று கூறப்படுகிறதாம்.

இதற்காக, தூதுவராலயங்கள் பல, வியர்வை சிந்தி வேலை செய்துகொண்டு இருக்கின்றனவாம்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .