2022 ஜூலை 07, வியாழக்கிழமை

யார் அந்த இருவர்?

Editorial   / 2018 பெப்ரவரி 09 , பி.ப. 03:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிணைமுறி அறிக்கையும் பாரிய ஊழல் மோசடி அறிக்கையும், தியவன்னாவையில் தான் இப்போது இருக்கின்றன. இதுகள் பற்றி விவாதம் நடத்த வேண்டுமென்று, ஒன்றிணைந்த எதிரணியினர் தான் முதலில் சத்தம் போட்டனர். பின்னர், கதிரைக் கூட்டமும் கத்தியது.

இது இவ்வாறிருக்க, விவாதத்தை தேர்தலுக்குப் பின் நடத்துவதற்கான சூழ்ச்சியொன்று இடம்​பெற்றதாக, நாட்டின் தலைவர், பிரசார மேடையொன்றில் அறிவித்தார்.

அவரது அந்த அறிவிப்புக்குப் பின்னர், பொரளையில் உள்ள வீடொன்றில் கூடிய இருவர், இதுபற்றிக் கலந்துரையாடினார்களாம். ஆனால், யார் இந்த இருவர் என்ற செய்தி மட்டும் வெளியாகவில்லை.

அவ்விருவர் பற்றித் தேடிப் பார்த்தபோது, ஒருவர் மொட்டின் மூளைக்காரரென்றும் அடுத்தவர், யானைக் கூட்டத்தில் சிறகு வெட்டப்பட்டவரென்றும் தெரியவந்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .