2022 ஓகஸ்ட் 17, புதன்கிழமை

‘தடை ஏதும் இல்லை, சென்றுதான் பாருங்களேன்’

Editorial   / 2017 ஒக்டோபர் 09 , பி.ப. 02:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டின் பிரதானமானவர் தலைமையில், ‘கை’ சின்னத்தில் அங்கம் வகிக்கும் முக்கிய உறுப்பினர்களுக்கு இடையிலான கூட்டம் காலியில் இடம்பெற்றுள்ளது. இந்தக் கூட்டம், மிக இரகசியமான முறையில் நடைபெற்றுள்ளது. அங்கே, பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் கூட அனுமதிக்கவில்லையாம்.

கூட்டம் ஆரம்பித்தபோது, "உங்களுடைய குறைகளைச் சொல்லுங்கள்" எனப் பிதானமானவர் கேட்டுள்ளார்.

அதற்கு, ஒரு சில உறுப்பினர்கள், "கட்சி இரண்டாகப் பிரிந்திருக்கிறது. சமாதானப் பேச்சுவார்த்தை நடத்துவோம்" என்று ஆலோசனை வழங்கியிருக்கிறார்கள். பிரதானமானவருக்கு ஒரே ஆத்திரமாம். அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்தாராம்.

அதுமாத்திரமல்லாது, "நாங்கள் தூது சென்று கதைத்துவிட்டு வருகிறோம்" என்றும் சிலர் கூறியிருக்கிறார்கள்.

அதற்கு, பிரதானமானவர் இப்படிப் பதில் கூறியிருக்கிறார்.

“நீங்கள் சென்று கதைப்பதற்கு எந்தத் தடையும் இல்லை. சென்றுதான் பாருங்களேன். கடந்த ஆட்சியிலும் இப்படிக் கதைத்துக்கொண்டிருந்தவர்கள் சிலர் இருக்கிறார்கள். நான் அனைத்தையும் அறிந்துகொண்டுதான் இருக்கிறேன்”

இந்தப் பதிலுக்குப் பிறகு, தூது செல்வது குறித்து யாரும் வாய்திறக்கவில்லையாம்!

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .