Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2022 செப்டெம்பர் 26 , பி.ப. 12:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
கணவனின் மோட்டார் சைக்கிளுக்கு (ஸ்கூட்டி), ஒவ்வொருநாளும் பெட்ரோல் நிரப்புவதற்காக, எரிபொருள் நிரப்பும் நிலையத்துக்கு அவருடைய மனைவி சென்றுவந்துள்ளார்.
அவ்வாறு சென்றுவந்த மனைவி, எரிபொருள் நிரப்பும் ஊழியருடன் சில நாட்களிலேயே ஓட்டமெடுத்துவிட்டார். இந்த சம்பவம் தென் மாகாணத்திலேயே இடம்பெற்றுள்ளது.
புது ஜோடியான அவ்விருவரும் கடந்த 2 வருடங்களுக்கு முன்பே திருமணம் செய்துகொண்டுள்ளனர்.
கணவன் வேலைக்குச் சென்றவுடன் வீட்டு வேலைகளை மனைவி கவனித்து வந்துள்ளார். இருவரும் முன்னர் ஆடைத்தொழிற்சாலையில் வேலைச் செய்துவந்துள்ளனர். அங்கு ஏற்பட்ட பழக்கம் காதலாக மலர்ந்து இருவரும் திருமணம் செய்துகொண்டுள்ளனர்.
கணவனிடத்தில் எவ்விதமான கெட்ட, பழக்கவழக்கங்களும் இல்லை. ஆனால், அவரது மனைவியோ, பார்ப்பவர்கள் சொக்கி இழுக்கும் வகையிலான உடலமைப்பை கொண்டவள்.
இருவரும் ஸ்கூட்டியில் பயணிக்கும் போது, ஸ்கூட்டியை அப்பெண்ணே, செலுத்திச்செல்வார். கணவன் பின்னால் அமர்ந்திருந்து பயணிப்பார்.
வேலைக்குச் செல்லும் கணவனை, மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு, பஸ் நிலையத்தில் இறக்கிவிட்டு வரும் அப்பெண், வீட்டு வேலைகளை முடித்துக்கொண்டு மீண்டும் மாலைவேளையில் பஸ் நிலையம் சென்று கணவனை அழைத்துவருவாள்.
எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக ஸ்கூட்டிக்குத் தேவையான எரிபொருளை பெற்றுக்கொள்வதற்கு, வரிசையில் நிற்கவேண்டிய நிலைமை அப்பெண்ணுக்கு ஏற்பட்டது.
எரிபொருளை நிரப்பும் போது, ஏதோவொன்றை கூறிய அப்பெண், எரிபொருள் நிரப்புவரை தன் வலைக்குள் விழச்செய்தார். அதனைத்தொடர்ந்து, தொலைபேசி இலக்கங்களை இருவரும் பகிர்ந்துகொண்டனர்.
குறுஞ்செய்திளை பகிர்ந்துகொண்ட இவ்விருவரும், காதல் வலைக்குள் விழுந்துவிட்டனர். இரண்டொருநாள் கடந்த நிலையில், பஸ்நிலையத்துக்கு காலையில் கணவனை ஏற்றிவந்த அப்பெண், எரிபொருள் நிரப்புவருடன் பறந்துசென்றுவிட்டாள்.
அன்றையதினம் கடமையை முடித்துகொண்டு வீட்டுக்குச் செல்வதற்காக, பஸ் நிலையம் திரும்பிய கணவன், மனைவியை காணாது அங்குமிங்கும் தேடியலைந்தார். மனைவியின் அலைபேசியும் இயங்கவில்லை.
என்னவோ, ஏதோவென ஆட்டோவொன்றை பிடித்துக்கொண்டு வீட்டுக்குச் சென்ற கணவன், வீடும் பூட்டியிருந்ததையடுத்து, தொலைபேசியில் அழைப்பை ஏற்படுத்தினாலும், மனைவி தொலைபேசி இயங்கவில்லை.
தொடர்ந்து என்னசெய்வதென திகைத்திருந்த கணவனின் தொலைபேசிக்கு குறுஞ்செய்தியொன்று வந்தது.
“நான், ஷெட் அய்யாவுடன் செல்கின்றேன். என்னை தேட வேண்டாம். நீங்கள். சந்தோஷமாய் இருங்கள்” என அதில் இருந்துள்ளது.
இதுதொடர்பில் கணவன் பொலிஸில் முறையிட்டுள்ளார். மூவரையும் அழைத்த பொலிஸார், கணவனையும் மனைவியையும் சேர்த்து வைப்பதற்கு பலமுறை முயற்சித்தனர். எனினும், அது கைகூடவில்லை.
“நான், இவருடன் சந்தோஷமாக வாழ்கின்றேன்” என பொலிஸாரிடம் தெரிவித்த மனைவி, எரிபொருள் நிரப்புவருடன், மோட்டார் சைக்கிளில் ஏற்றிச்சென்றுவிட்டார்.
ஜோடி பறப்பதை அவதானித்த கணவன், கண்ணீர் மல்க, பொலிஸ் நிலையத்திலிருந்து வீடு திரும்பினார்.
15 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
1 hours ago