2024 நவம்பர் 02, சனிக்கிழமை

வரலாற்றில் இன்று: ஒக்டோபர் 31

Janu   / 2024 ஒக்டோபர் 31 , மு.ப. 04:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

903 : அமெரிக்கா,  இந்தியானா பொலிசில் ரயில் விபத்தில் 17 உயிரிழந்தனர்.

1913 : ஐக்கிய அமெரிக்காவின் முதலாவது நெடுஞ்சாலை லிங்கன் நெடுஞ்சாலை திறக்கப்பட்டது.

1918 : முதலாம் உலகப் போர் – ஆத்திரியா - ஹங்கேரி 1867 ஒப்பந்தம் கைவிடப்பட்டு, ஹங்கேரி முழுமையான விடுதலை அடைந்தது.

1922 : பெனிட்டோ முசோலினி இத்தாலியின் பிரதமரானார்.

1924 : உலக சேமிப்பு நாள் இத்தாலியின் மிலன் நகரில் சேமிப்பு வங்கிகளின் உலக அமைப்பினால் அறிவிக்கப்பட்டது.

1931 : தமிழின் முதல் பேசும் படம் காளிதாஸ் வெளியானது.

1940 :  இரண்டாம் உலகப் போர் -  பிரிட்டன் சண்டை முடிவுற்றது. ஐக்கிய இராச்சியம் ஜேர்மனியின் முற்றுகையை முறியடித்தது.

1941 : இரண்டாம் உலகப் போர் - ஐஸ்லாந்துக்கு அருகில் அமெரிக்கக் கப்பல் ஒன்றை ஜேர்மனியப் படகு தாக்கி மூழ்கடித்ததில் 100 அமெரிக்கக் கடற்படையினர் கொல்லப்பட்டனர்.

1954 : அல்ஜீரியாவில் பிரெஞ்ச் ஆக்கிரமிப்புக்கெதிராக அல்ஜீரிய தேசிய விடுதலை முன்னணி போராட்டத்தை ஆரம்பித்தது.

1956 : சூயெஸ் நெருக்கடி -  ஐக்கிய இராச்சியம் மற்றும் பிரான்சு சூயஸ் கால்வாயைத் திறக்க வற்புறுத்தி எகிப்தின் மீது குண்டுகளை வீசின.

1961 : ஸ்டாலினின் உடல் மாஸ்கோவில் உள்ள லெனினின் நினைவகத்தில் இருந்து அகற்றப்பட்டது.

1963 : இந்தியானா பொலிசில் பனிக்கட்டி சறுக்கல் களியாட்ட விழா ஒன்றின் போது இடம்பெற்ற புரொப்பேன் தாங்கி வெடிப்பில் 74 பேர் கொல்லப்பட்டு, 400 பேர் காயமடைந்தனர்.

1968 : வியட்நாம் போர் - பாரிஸ் அமைதிப் பேச்சுக்களில் முன்னேற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து வடக்கு வியட்நாம் மீதான அனைத்துத் தாக்குதல்களையும் நவம்பர் 1 இலிருந்து நிறுத்துவதாக அமெரிக்க அரசுத்தலைவர் லின்டன் பி. ஜான்சன் அறிவித்தார்.

1973 : அயர்லாந்தில் டப்ளின் நகர சிறை ஒன்றில் இருந்து மூன்று ஐரியக் குடியரசு இராணுவத்தினர் அங்கு தரையிறங்கிய கடத்தப்பட்ட உலங்கு வானூர்தி ஒன்றில் தப்பி வெளியேறினர்.

1979 : மெக்சிக்கோ நகரில் வெஸ்ட்டர்ன் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று வீழ்ந்ததில் 73 பேர் உயிரிழந்தனர்.

1984 : இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி இரண்டு சீக்கியப் பாதுகாவலர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். அதன் பின்னர் புதுடில்லியில் இடம்பெற்ற கலவரத்தில் சுமார் 3,000 சீக்கியர்கள் கொல்லப்பட்டனர்.

1996 : பிரேசில், சாவோ பாவுலோவில் டாம் விமானம் ஒன்று வீழ்ந்ததில் 99 பேர் உயிரிழந்தனர்.

1999 : ஜெசி மார்ட்டின் 11 மாதங்கள் பாய்க்கப்பலில் தனியே இடைவிடாது உலகைச் சுற்றி வந்து மெல்பேர்ண் திரும்பினார்.

1999 : எகிப்திய விமானம் ஒன்று மசாஸ்செட்சில் வீழ்ந்ததில் அதில் பயணஞ் செய்த 217 பேரும் உயிரிழந்தனர்.

2000 : சோயுசு டிஎம்-31 விண்கலம் அனைத்துலக விண்வெளி நிலையத்தில் தங்கி ஆய்வுகள் நடத்துவதற்கான முதலாவது குழுவினரை ஏற்றிச் சென்றது.

2000: சிங்கப்பூர் போயிங் 747 - 400 விமானம் தாய்பெய் நகரில் விபத்துக்குள்ளாகியதில் 83 பேர் உயிரிழந்தனர்.

2003 : 22 ஆண்டுகள் ஆட்சியின் பின்னர் மலேசியப் பிரதம மந்திரி மகதிர் பின் முகமது தமது பதவியைத் துறந்தார். இவர் 2018 இல் மீண்டும் தனது 92 ஆவது பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

2011 : உலக மக்கள் தொகை ஏழு பில்லியனைத் தாண்டியது.

2015 : மெட்ரோஜெட் விமானம் 9268 வடக்கு சினாயில் குண்டு வைத்துத் தகர்க்கப்பட்டதில் 224 பேர் கொல்லப்பட்டனர்.

2017 : நியூயார்க் நகரில் சுமையுந்து ஒன்று பாதசாரிகள் மீது மோதியதில் எட்டு பேர் கொல்லப்பட்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .