2022 ஓகஸ்ட் 11, வியாழக்கிழமை

வரலாற்றில் இன்று: ஜனவரி 14

Ilango Bharathy   / 2022 ஜனவரி 14 , மு.ப. 08:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

1539 – எசுப்பானியா கியூபாவை இணைத்துக் கொண்டது.

1690 – கிளாரினெட் இசைக்கருவி செருமனியில் வடிவமைக்கப்பட்டது.

1724 – எசுப்பானிய மன்னன் ஐந்தாம் பிலிப் முடி துறந்தான்.

1761 – இந்தியாவில் மூன்றாம் பானிபட் போர் அகமது ஷா துரானி தலைமையிலான ஆப்கானியர்களுக்கும் மராட்டியர்களுக்கும் இடையில் இடம்பெற்றது. 

1784 – அமெரிக்கப் புரட்சிப் போர்: ஐக்கிய அமெரிக்கா பெரிய பிரித்தானியாவுடன் ஒப்பந்தம் செய்து கொண்டது.

1814 – கீல் உடன்பாடு: நோர்வேயை டென்மார்க் மேற்கு பொமிரானியாவுக்காக சுவீடனுக்கு விட்டுக்கொடுத்தது.

1858 – பிரான்ஸ் மன்னன் மூன்றாம் நெப்போலியன் கொலைமுயற்சி ஒன்றிலிருந்து தப்பினான்.

1865 – இலங்கையில் இடம்பெற்ற தொடருந்து விபத்தில் 36 பேர் உயிரிழந்தனர்.

1907 – ஜமெய்க்காவில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.

1913 – கிரேக்கம் துருக்கியரை பிசானி என்ற இடத்தில் இடம்பெற்ற சமரில் வென்றனர்.

1932 – தி இந்தியன் ஃபைன் ஆர்ட்ஸ் சொசைட்டி இசை நடன சபை சென்னையில் ஆரம்பிக்கப்பட்டது.

1943 – இரண்டாம் உலகப் போர்: பிராங்கிளின் ரூசவெல்ட், வின்ஸ்டன் சர்ச்சில் ஆகியோர் கசபிளாங்காவில் சந்தித்து போரின் அடுத்தகட்ட நகர்வுக்கான தீர்மானங்களை எடுத்தனர்.

1950 – சோவியத் ஒன்றியத்தின் மிக்-17 போர் விமானம் வெள்ளோட்டம் விடப்பட்டது.

1953 – யோசிப் டீட்டோ யுகோசுலாவியாவின் 1-வது அரசுத்தலைவராகப் பதவியேற்றார்.

1969 – அவாயிற்கு அருகில் எண்டர்பிரைசு என்ற அமெரிக்கக் கடற்படைக் கப்பல் ஒன்றில் தற்செயலாக இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 27 பேர் கொல்லப்பட்டனர்.

1972 – டென்மார்க் அரசியாக இரண்டாம் மார்கிரெட் முடிசூடினார். 1412 இற்குப் பின்னர் முடிசூடும் முதலாவது டென்மார்க் மகாராணி இவராவார்.

1974 – திருச்சி, தஞ்சை மாவட்டங்களிலிருந்து பிரித்து புதுக்கோட்டை மாவட்டம் உருவாக்கப்பட்டது.

1993 – போலந்தில் பயணிகள் கப்பல் ஒன்று மூழ்கியதில் 55 பேர் உயிரிழந்தனர்.

1994 – ஐக்கிய அமெரிக்கத் தலைவர் பில் கிளிண்டன் மற்றும் உருசியத் தலைவர் போரிஸ் யெல்ட்சின் கிரெம்ளினில் புதிய பாதுகாப்பு ஒப்பந்தம் ஒன்றைச் செய்து கொண்டனர்.

1995 – சந்திரிகா அரசு - விடுதலைப் புலிகள் 3ம் கட்ட பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாயின.

1996 – உலகின் முதலாவது 24 மணி முழு நேர தமிழ் வானொலி ஒலிபரப்பு, கனேடிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் டொராண்டோ நகரில் ஆரம்பிக்கப்பட்டது.

1998 – ஆப்கானித்தானின் சரக்கு விமானம் ஒன்று பாக்கித்தானில் மலை ஒன்றில் மோதியதில் 50 பேர் உயிரிழந்தனர்.

2000 – 1993 இல் நூற்றுக்கும் அதிகமான பொசுனிய முசுலிம்களைப் படுகொலை செய்தமைக்காக ஐந்து பொசுனிய பொசுனிய குரொவாசியர்களுக்கு ஐக்கிய நாடுகள் அவை 25 ஆன்டுகள் சிறைத்தண்டனை வழங்கியது.

2005 – சனிக் கோளின் டைட்டான் நிலாவில் ஐரோப்பாவின் இயூஜென் விண்கலம் இறங்கியது.

2011 – தியுனீசியப் புரட்சி: தியுனிசியாவின் அரசுத்தலைவர் பென் அலி சவூதி அரேபியாவிற்குத் தப்பி ஓடினார். அரேபிய வசந்தம் ஆரம்பமானது.

2015 – திருத்தந்தை பிரான்சிஸ் யோசப் வாசு அடிகளை கொழும்பில் புனிதராகத் திருநிலைப்படுத்தினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .