2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

வரலாற்றில் இன்று: டிசம்பர் 20

Janu   / 2025 டிசெம்பர் 20 , பி.ப. 04:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

1606 – வேர்ஜீனியா கம்பனியின் மூன்று கப்பல்கள் ஆங்கிலேயர்களை ஏற்றிக் கொண்டு வேர்ஜீனியாவின் ஜேம்ஸ்டவுனை நோக்கிக் கிளம்பியது. இதுவே அமெரிக்காக்களில் இடம்பெற்ற முதலாவது நிரந்தர ஆங்கிலக் குடியேற்றத் திட்டமாகும்.

1803 – பிரெஞ்சுகளிடம் இருந்து லூசியானா விலைக்கு வாங்கப்பட்டதைக் குறிக்க நியூ ஓர்லென்ஸ் நகரில் பெரும் கொண்டாட்டங்கள் இடம்பெற்றன.

1808 – இலண்டனில் கோவெண்ட் பூங்கா நாடக அரங்கு தீக்கிரையானது.

1832 – போக்லாந்து தீவுகளைக் கைப்பற்றும் பொருட்டு கப்டன் ஓன்சுலோ தலைமையில் பிரித்தானியப் படைக்கப்பல் எமொண்ட் துறைமுகத்தை வந்தடைந்தது.

1844 – இலங்கையில் அடிமை முறையை முற்றாக ஒழிக்கும் அரசாணை பிறப்பிக்கப்பட்டது.

1860 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: தெற்கு கரொலைனா ஐக்கிய அமெரிக்காவில் இருந்து வெளியேறிய முதலாவது மாநிலமானது.

1915 – முதலாம் உலகப் போர்: கடைசி ஆத்திரேலியப் படையினர் கலிப்பொலியில் இருந்து வெளியேறினர்.

1917 – சோவியத் ஒன்றியத்தின் முதலாவது இரகசியக் காவற்துறை 'சேக்கா' அமைக்கப்பட்டது.

1924 – இட்லர் லான்ட்சுபெர்கு சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

1941 – இரண்டாம் உலகப் போர்: அமெரிக்கத் தன்னார்வப் படை 'பறக்கும் புலிகள்' சீனாவில் குன்மிங் நகரில் முதலாவது சமரை நிகழ்த்தியது.

1942 – இரண்டாம் உலகப் போர்: கல்கத்தா சப்பானியர்களின் வான் குண்டுத்தாக்குதலுக்கு உள்ளானது.

1943 – பொலிவியாவில் இராணுவப் புரட்சி இடம்பெற்றது.

1948 – புதிதாக உருவாக்கப்பட்ட இந்தோனேசியக் குடியரசின் தற்காலிகத் தலைநகர் யோக்யகர்த்தாவை டச்சுப் படைகள் கைப்பற்றின.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X