R.Tharaniya / 2025 ஏப்ரல் 20 , பி.ப. 02:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
1839: லண்டன் உடன்படிக்கை மூலம் பெல்ஜியம் ஒரு முடியரசாக்கப்பட்டது.
1954: பாகிஸ்தானில் உருதும் வங்காளமும் தேசிய மொழிகளாக அறிவிக்கப்பட்டன.
1971: முதலாவது விண்வெளி நிலையமான சல்யூட்-1 ஏவப்பட்டது.
1975: இந்தியாவின் முதலாவதுசெய்மதியான ஆர்யபட்டா ஏவப்பட்டது.
1989: அமெரிக்காவின் அயோவா என்ற கப்பலில் பீரங்கி மேடை ஒன்று வெடித்ததில் 47 கடற்படையினர் கொல்லப்பட்டனர்.
1993: ஐக்கிய அமெரிக்கா, டெக்சாசில் டாவீடீயன் என்ற மதக்குழு ஒன்றின் கட்டிடத்தை அமெரிக்க எஃப்.பி.ஐ, 51 நாட்களாக சுற்றிவளைத்ததில் அக்கட்டிடம் தீப்பற்றியது. மதக்குழுத் தலைவர் டேவிட் கொரேஷ் உட்பட 87பேர் கொல்லப்பட்டனர்.
1995: அமெரிக்காவின் ஒக்லஹாமா நகரில் இடம்பெற்ற குண்டுவெடிப்பினால் 198பேர் பலி சுமார் 500 பேர் காயம்.
1995: சந்திரிகா - விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு இடையிலான பேச்சுவார்த்தை முறிவடைந்ததாக அவ்வியக்கம் அறிவித்தது. அதனையடுத்து திருகோணமலைத் துறைமுகத்தில் வைத்து கடற்படையினரின் இரண்டு பீரங்கிக் கப்பல்கள் புலிகள் இயக்கத்தினரால் மூழ்கடிக்கப்பட்டன.
1999: ஜெர்மனியின் நாடாளுமன்றம், பெர்லின் நகருக்கு மாற்றப்பட்டது.
2005: ஜேர்மனியைச் சேர்ந்த கர்தினால் ரட்ஸிங்கர் பாப்பரசராக தெரிவானார். இவர் 16 ஆவது ஆசிர்வாதப்பர் என்ற பெயரை தெரிவு செய்தார்.
2006: நேபாளத்தில் மன்னராட்சியை எதிர்த்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
9 minute ago
20 minute ago
35 minute ago
50 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
20 minute ago
35 minute ago
50 minute ago