Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 16, புதன்கிழமை
Freelancer / 2023 ஒக்டோபர் 03 , மு.ப. 01:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
1739: மூன்றாண்டு கால ரஷ்ய – துருக்கி யுத்தத்தின் இறுதியில் ஒட்டோமான் பேரரசுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான 'நீஸ்ஸா ஒப்பந்தம்' கையெழுத்திடப்பட்டது.
1922: தொலைபேசி கம்பி வழியாக முதலாவது தொலைநகல் புகைப்படம் வொஸிங்டனில் அனுப்பப்பட்டது.
1929: சேர்பியா, குரோஷியா, ஸ்லோவேனியா ஆகியன இணைந்த இராஜ்ஜியத்திற்கு யூகோஸ்லாவிய இராஜ்ஜியம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
1932: பிரிட்டனிடமிருந்து ஈராக் சுதந்திரம் பெற்றது.
1935: ஜெனரல் டி போனோ தலைமையில், எத்தியோப்பியா மீது இத்தாலி படையெடுத்தது.
1940: அமெரிக்காவில் பராசூட் அணி ஆரம்பிக்கப்பட்டது.
1942: ஜேர்மனியினால் வி-2 ரொக்கட் விண்ணில் ஏவப்பட்டது. மனிதர்களால் உருவாக்கப்பட்டு விண்வெளியை அடைந்த முதல் பொருள் இது.
1944: ஜேர்மனியிடம் போலந்து சரணடைந்தது.
1945: தொழிற்சங்கங்களின் உலக கூட்டமைப்பு நிறுவப்பட்டது.
1952 பிரிட்டன் வெற்றிகரமாக அணுவாயுதத்தை பரீட்சித்தது.
1990: இரண்டாம் உலக யுத்தத்தின் பின்னர் கிழக்கு, மேற்காக பிரிக்கப்பட்ட இரு ஜேர்மனிகளும் மீண்டும் ஒன்றிணைந்தன.
1995: அமெரிக்க றக்பி கால்பந்தாட்ட நட்சத்திரமான ஓ.ஜே.சிம்ஸன், தனது மனைவி நிகோலையும் அவரின் நண்பர் ரொனால்ட் கோல்ட்மனையும் கொலை செய்ததாக கூறப்பட்ட வழக்கில் சிம்ஸன் குற்றமற்றவர் என பரபரப்பான தீர்ப்பு வழங்கப்பட்டது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
49 minute ago
1 hours ago
2 hours ago