Ilango Bharathy / 2021 ஒக்டோபர் 10 , மு.ப. 06:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
1780 – கரிபியனில் சூறாவளியினால் 20,000-30,000 பேர் வரை உயிரிழந்தனர்.
1868 – கியூபாவின் முதலாவது விடுதலைப் பிரதேசம் “லாடெமஹாகுவா” பகுதியில் கார்லோஸ் செஸ்பெடஸ் என்பவர் தலைமையில் அறிவிக்கப்பட்டது.
1942 – சோவியத் ஒன்றியம் அவுஸ்திரேலியாவுடன் தூதரக உறவை ஏற்படுத்தியது.
1943 – இரண்டாம் உலகப் போர்: ஜப்பானியரின் பிடியில் இருந்த சிங்கப்பூரில் சிங்கப்பூர் துறைமுகம் மீதான தாக்குதலுக்கு உடந்தையாக இருந்ததாக 57 அப்பாவிகள் ஜப்பானியர்களினால் கைது செய்யப்பட்டு சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டனர்.
1944 – இரண்டாம் உலகப் போர்: 800 ஜிப்சி சிறுவர்கள் அவுஸ்விச் வதைமுகாமில் படுகொலை செய்யப்பட்டனர்.
1949 – விடுதலை பெற்ற இலங்கையின் புதிய இராணுவம் உருவாக்கப்பட்டது.
1970 – பீஜி, ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து விடுதலை பெற்றது.
1986 – 7.5 ரிக்டர் அளவு நிலநடுக்கம் எல் சல்வடோரின் சான் சல்வடோர் நகரைத் தாக்கியதில் 1,500 பேர் உயிரிழந்தனர்.
1991 – தமிழ்நாட்டில் நாகப்பட்டினம் மாவட்டம் உருவாக்கப்பட்டது.
7 hours ago
06 Nov 2025
06 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
06 Nov 2025
06 Nov 2025