Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 01, வியாழக்கிழமை
Janu / 2024 ஓகஸ்ட் 17 , மு.ப. 12:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
1939 : த வைசார்ட் ஒஃப் ஓஸ், முதற்தடவையாக நியூ யோர்க் நகரில் காண்பிக்கப்பட்டது.
1943 : இரண்டாம் உலகப் போர் - ஐக்கிய அமெரிக்காவின் எட்டாவது வான்படையினர் ஜெர்மனியில் தமது 60 குண்டுவீச்சு விமானங்களை இழந்தனர்.
1943 : இரண்டாம் உலகப் போர் - வின்ஸ்டன் சேர்ச்சில், பிராங்கிளின் ரூஸ்வெல்ட், கனடா பிரதமர் வில்லியம் லயன் மக்கென்சி கிங் ஆகியோர் கலந்து கொண்ட கியூபெக் மாநாடு ஆரம்பமானது.
1945 : இந்தோனேசியா விடுதலையை அறிவித்தது.
1947 : இந்தியாவையும் பாகிஸ்தானையும் பிரிக்கும் ராட்கிலிஃப் கோடு வெளியிடப்பட்டது.
1958 : பயனியர் - 0 சந்திரனைச் சுற்ற அனுப்பப்பட்டது. புறப்பட்ட 77 செக்கன்களில் இது அழிந்தது.
1959 : மொன்டானாவில் இடம்பெற்ற 7/5 அளவு நிலநடுக்கத்தினால் குவேக் ஏரி அமைக்கப்பட்டது.
1960 : காபொன் பிரான்சிடம் இருந்து விடுதலை அடைந்தது.
1962 : கிழக்கு ஜேர்மனியில் இருந்து பேர்லின் சுவரைக் கடந்து தப்பித்துச் செல்ல முயன்ற 18 வயதுடைய பேட்டர் ஃபெக்டர் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்தச் சுவரைக் கடந்து செல்ல முயன்று இறந்த முதலாவது நபர் இவராவார்.
1969 : மிசிசிப்பியில் இடம்பெற்ற சூறாவளியில் 248 பேர் கொல்லப்பட்டனர்.
1970 : வெனேரா 7 விண்கலம் ஏவப்பட்டது. வேறொரு கோளில் இருந்து (வெள்ளி) வெற்றிகரமாகத் தகவல்களை அனுப்பிய முதலாவது விண்கலம் இதுவாகும்.
1979 : இரண்டு சோவியத் ஏரோபுளொட் வானூர்திகள் உக்ரேன் வான்வெளியில் மோதியதில், 156 பேர் கொல்லப்பட்டனர்.
1982 : முதலாவது இறுவட்டு ஜெர்மனியில் வெளியிடப்பட்டது.
1988 : பாகிஸ்தான் ஜனாதிபதி ஸியா உல் ஹக் மற்றும் பாகிஸ்தானின் அமெரிக்கத் தூதுவர் ஆர்னல்ட் ராஃபெல் ஆகியோர் விமான விபத்தில் கொல்லப்பட்டனர்.
1991 : சிட்னியின் புறநகர்ப் பகுதியான ஸ்ட்ராத்ஃபீல்ட் என்னும் இடத்தில், வேட் பிராங்கம் என்பவர் சகட்டுமேனிக்கு சுட்டதில் 7 பேர் கொல்லப்பட்டு 6 பேர் காயமடைந்தனர்.
1999 : துருக்கி, இஸ்மித் என்ற இடத்தில் 7.4 ரிக்டர் நிலநடுக்கம் ஏற்பட்டதில் 17,000 பேர் வரையில் கொல்லப்பட்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
39 minute ago
47 minute ago
59 minute ago