Ilango Bharathy / 2021 செப்டெம்பர் 06 , மு.ப. 12:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
1901 : அமெரிக்க அதிபர் வில்லியம் மக்கின்லி நியூயோர்க்கில் சுடப்பட்டுப் படுகாயமடைந்தார்.
1930 : ஆர்ஜெண்டீனாவின் அதிபர் ஹிப்போலிட்டோ இரிகோயென் இராணுவப் புரட்சியை அடுத்து பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.
1936 : கடைசி தாஸ்மானியப் புலி தாஸ்மானியா, ஹோபார்ட்டில் இறந்தது.
1939 : இரண்டாம் உலகப் போர் - தென்னாபிரிக்கா ஜேர்மனியுடன் போரை அறிவித்தது.
1946 : இலங்கையில் ஐக்கிய தேசியக் கட்சி டி. எஸ். சேனநாயக்காவினால்ஆரம்பிக்கப்பட்டது.
1932 : கனடாவின் முதலாவது தொலைக்காட்சி நிலையம், CBFT-TV, மொன்ட்றியாலில்திறக்கப்பட்டது.
1951 : தினமலர் நாளிதழ் ஆரம்பிக்கப்பட்டது.
1955 : துருக்கியில் இஸ்தான்புல் நகரில் கிரேக்கர்களுக்கும் ஆர்மீனியர்களுக்கும்எதிராக இனக்கலவரங்கள் இடம்பெற்றன. பத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
1965 : இந்திய - பாகிஸ்தான் போர், இந்தியா பாகிஸ்தானைத் தாக்கி லாகூரை ஒரு மணி நேரத்தில் கைப்பற்றப் போவதாக அறிவித்தது.
1966 : தென்னாபிரிக்க பிரதமர் ஹெண்ட்ரிக் வேர்வேர்ட் நாடாளுமன்ற அமர்வின் போது குத்திக் கொலை செய்யப்பட்டார்.
1968 : சுவாசிலாந்து ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து விடுதலை அடைந்தது.
1970 : ஐரோப்பாவில் இருந்து நியூயோர்க் சென்று கொண்டிருந்த இரண்டு பயணிகள் விமானங்கள், பாலஸ்தீனத் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டு ஜோர்தானுக்குக் கொண்டு செல்லப்பட்டது.
1990 : யாழ்ப்பாணக் கோட்டை மீதான புலிகளின் முற்றுகையின் போது இலங்கையின் குண்டுவீச்சு விமானம் ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டது.
1997 : வேல்ஸ் இளவரசி டயானாவின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. 2.5 பில்லியன் மக்கள் தொலைக்காட்சி மூலம் இந்நிகழ்வைப் பார்த்தனர்.
2006 : ஐரோப்பியத் தமிழ் வானொலி, மக்கள் தொலைக்காட்சி ஆகியன ஆரம்பிக்கப்பட்டன.
7 hours ago
06 Nov 2025
06 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
06 Nov 2025
06 Nov 2025