Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 01, வியாழக்கிழமை
Janu / 2024 செப்டெம்பர் 29 , மு.ப. 01:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
1227: புனித ரோமப் பேரரசன் இரண்டாம் பிரெடெரிக் சிலுவைப் போரில் பங்குபற்றாமல் போனதை அடுத்து திருத்தந்தை ஒன்பதாம் கிரகரி அவனை மதவிலக்கம் செய்தார்.
1567: பிரான்சில் இரண்டாம் சமயப் போர் ஆரம்பமானது.
1833: மூன்று வயதுள்ள இரண்டாம் இசபெல்லா ஸ்பெயின் அரசியாக முடிசூடினாள்.
1848: ஹங்கேரியப் படையினர் குரொவேசியர்களை பாகொஸ்ட் என்ற இடத்தில் இடம்பெற்ற ஹங்கேரிப் புரட்சி போரில் தோற்கடித்தனர்.
1850: இங்கிலாந்திலும் வேல்சிலும் ரோமன் கத்தோலிக்க உயர்சபையை திருத்தந்தை ஒன்பதாம் பயஸ் மீண்டும்
அமைத்தார்.
1885: உலகின் முதலாவது மின்சார திராம் வண்டி இங்கிலாந்தில் பிளாக்பூல் நகரில் சேவையை ஆரம்பித்தது.
1911: இத்தாலி, ஒட்டோமான் பேராட்சிக்கெதிராகப் போர் தொடுத்தது.
1916: ஜோன் ரொக்பெல்லர் உலகின் முதலாவது கோடீஸ்வரர் ஆனார்.
1918: முதலாம் உலகப் போர் பல்கேரியா கூட்டுப் படைகளுடன் அமைதி ஒப்பந்தத்தை ஏற்படுத்தியது.
1938: செக்கோசிலாவாக்கியாவின் சுடெட்டென்லாந்துப் பகுதியை ஆளும் உரிமையை ஜேர்மனிக்கு வழங்குவதற்கான உடன்படிக்கையில் பிரித்தானியா, பிரான்ஸ், ஜேர்மனி, மற்றும் இத்தாலி ஆகியன கைச்சாத்திட்டன.
1941: உக்ரேனின் கீவ் நகரில் குறைந்தது 33,771 யூதர்கள் நாசி ஜேர்மனியரினால் கொல்லப்பட்டனர்.
1943: அமெரிக்க தளபதி ஜெனரல் ஐஸனோவருக்கும் இத்தாலிய தளபதி பியட்ரோ படோக்லியோவுக்கும் இடையில் பிரித்தானிய கப்பலான நெல்சனில் வைத்து போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.
1949: சீன மக்கள் குடியரசின் எதிர்கால பொதுத் திட்டங்களை சீன கம்யூனிஸ்ட் கட்சி வரைந்தது.
1951: அமெரிக்காவில் விளையாட்டு நிகழ்ச்சியொன்று முதன்முதலாக நேரடியாக தொலைக்காட்சியில்
ஒளிபரப்பப்பட்டது. இரு கல்லூரிகளுக்கிடையிலான கால்பந்தாட்டப்போட்டியே இவ்வாறு நேரடி
ஒளிபரப்பு செய்யப்பட்டது.
1960: கொங்கோ பிரச்சினையில் ஐ.நா. படைகள் தலையிட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து சோவியத் யூனியன்
பிரமர் நிக்கிட்டா குருசேவ் ஐ.நா.வில் ஆவேசமாக செயற்பட்டார். ஐ.நா. செயலாளர் நாயகம் டேக்
ஹம்மர்ஸ்க் ஜோல்டை பதவி நீக்க வேண்டுமெனவும் குருசேவ் கூறினார்.
1962: கனடாவின் முதலாவது செய்மதி அலூட் 1 ஏவப்பட்டது.
1971: அரபுக் கூட்டமைப்பில் ஓமான் இணைந்து கொண்டது.
1972: ஜப்பான் மக்கள் சீனக் குடியரசுடனான தூதரக உறவை மீள அமைத்து, சீனக் குடியரசுடனான உறவை
முறித்துக் கொண்டது.
1975: அமெரிக்காவில் முதல் தடவையாக கறுப்பினத்தவரை உரிமையாளராகக் கொண்ட தொலைக்காட்சி
நிலையம் (WGPR) ஆரம்பம்.
1979: அயர்லாந்துக்கு முதல் தடவையாக பாப்பரசர் இரண்டாம் அருளப்பர் சின்னப்பர் விஜயம். வட அயர்லாந்து
விவகாரத்தில் வன்முறையை கைவிடும்படி இரு தரப்பினரையும் அவர் கோரினார்.
1991: ஹெய்ட்டியில் இராணுவப் புரட்சி இடம்பெற்றது.
1992: பிரேஸில் ஜனாதிபதி பெர்னாண்டோ கொலோர் மெல்லோவுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் குற்றவியல்
பிரேரணை நிறைவேற்றப்பட்டது. ஜனாதிபதி இராஜினாமா.
1993: மகாராஷ்டிரா மாநிலத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 10,000 பேர் கொல்லப்பட்டனர்.
2003: சூறாவளி ஜுவான் கனடாவின் ஹொலிபாக்ஸ் துறைமுகத்தைத் தாக்கிப் பேரழிவை விளைவித்தது.
2006: பிரேஸிலில் இரு விமானங்கள் நடுவானில் மோதியதால் 154 பேர் பலி.
2008: லீமன் பிரதர்ஸ் மற்றும் வொஷிங்டன் மியூசுவல் நிதி நிறுவனங்கள் வங்குரோத்ததைத் தொடர்ந்து
அமெரிக்க பங்குச்சந்தையில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டது.
2009: பசுபிக் சமுத்திர நாடான சமோவாவில் 8.0 ரிச்டர் அளவிலான பூகம்பம் ஏற்பட்டது. இப்பூகம்பம் மற்றும் சுனாமியினால் 189 பேர் இறந்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
26 minute ago
37 minute ago
41 minute ago