Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2023 செப்டெம்பர் 30 , மு.ப. 01:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
399: நான்காம் ஹென்றி, இங்கிலாந்தின் மன்னனாக முடி சூடினான்.
1744: பிரான்ஸ், மற்றும் ஸ்பெயின் இணைந்து சார்டீனியா பேரரசை தோற்கடித்தனர்.
1791: மோட்ஸார்ட்டின் கடைசி ஒப்பேரா வியென்னாவில் அரங்கேறியது.
1840: நெப்போலியன் பொனபார்ட்டின் எஞ்சிய உடல் பகுதி, பிரான்சுக்கு எடுத்து வரப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.
1860: பிரித்தானியாவின் முதலாவது அமிழ் தண்டூர்தி (ட்ரம்) சேவை ஆரம்பமானது.
1867: ஐக்கிய அமெரிக்கா மிட்வே தீவின் அதிகாரத்தைக் கைப்பற்றியது.
1882: உலகின் முதலாவது நீர்மின் திறன், ஐக்கிய அமெரிக்காவின் விஸ்கொன்சின் மாநிலத்தில் அமைக்கப்பட்டது.
1888: கிழிப்பர் ஜேக் தனது மூன்றாவது மற்றும் நான்காவது கொலைகளைச் செய்தான்.
1895: மடகஸ்கார் பிரெஞ்சு பாதுகாக்கப்பட்ட அரசாக அறிவிக்கப்பட்டது.
1901: ஹியூபேர்ட் செசில் பூத் தூசுறிஞ்சிக்கான காப்புரிமம் பெற்றார்.
1935: அரிசோனா, நெவாடா மாநிலங்களுக்கிடையே ஊவர் அணை திறக்கப்பட்டது.
1938: செக்கோசிலவாக்கியாவின் சுடெட்டென்லாந்துப் பகுதியை ஆளும் உரிமையை ஜேர்மனிக்கு வழங்குவதற்கான உடன்படிக்கையில் பிரித்தானியா, பிரான்ஸ், ஜேர்மனி, மற்றும் இத்தாலி ஆகியன அதிகாலை 2:00 மணிக்கு கையெழுத்திட்டன.
1938: "பொதுமக்களின் இருப்பிடங்கள் மீது வேண்டுமென்றே குண்டுத்தாக்குதல்" நடத்தப்படுவது நாடுகளின் அணியினால் தடை செய்யப்பட்டது.
1945: இங்கிலாந்தில் தொடருந்து விபத்தில் 43 பேர் கொல்லப்பட்டனர்.
1947: பாகிஸ்தான், யேமன் ஐ.நா.வில் இணைந்தன.
1949: சோவியத்தினரின் தரைவழித் தடையை அடுத்து மேற்கு ஜெர்மனிக்கு 2.3 மில்லியன் தொன் உணவுப் பொருட்கள் வான்வெளி மூலமாக அனுப்பப்படுவது முடிவுக்கு வந்தது.
1965: இந்தோனேசியாவில் இடம்பெற்ற கம்யூனிஸ்டுகளின் புரட்சியை ஜெனரல் சுகார்ட்டோ முறியடித்து சுமார் ஒரு மில்லியன் கம்யூனிஸ்டுகளைக் கொன்று குவித்தார்.
1966: "பெக்குவானாலாந்து" பிரித்தானியாவிடம் இருந்து விடுதலையை அறிவித்து பொட்சுவானாக் குடியரசு ஆகியது.
1967: இலங்கை வானொலி, இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் எனப் பெயர் மாற்றப்பட்டது.
1993: இந்தியாவின் மத்தியப் பிரதேசத்தின் லட்டூர் மற்றும் ஒஸ்மனாபாத் நகரங்களில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர்.
1995 : தமிழகத்தின் திருச்சி மாவட்டத்திலிருந்து பிரித்து கரூர் மாவட்டம் உருவாக்கப்பட்டது.
2001: இந்தியக் காங்கிரசின் மூத்த தலைவர்களில் ஒருவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான மாதவராவ் சிந்தியா விமான விபத்தில் கொல்லப்பட்டார்.
2003: தமிழ் விக்கிப்பீடியா ஆரம்பிக்கப்பட்டது.
7 minute ago
18 minute ago
41 minute ago
48 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
18 minute ago
41 minute ago
48 minute ago