R.Tharaniya / 2025 டிசெம்பர் 11 , பி.ப. 05:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
220 – சீனப் பேரரசர் சியான் முடி துறந்ததை அடுத்து ஆன் அரசமரபு முடிவுக்கு வந்தது.
1041 – பைசாந்தியப் பேரரசி சோயி தனது வளர்ப்பு மகனை ஐந்தாம் மைக்கேல் என்ற பெயரில் பேரரசனாக்கினாள்.
1317 – சுவீடன் மன்னன் பிர்கர் தனது இரண்டு சகோதரர்கள் வால்திமார், எரிக் ஆகியோரைக் கைது செய்து நிக்கோப்பிங் கோட்டை நிலவறையில் அடைத்து வைத்து உணவு கொடுக்காமல் பட்டினியால் இறக்க வைத்தான்.
1520 – மார்ட்டின் லூதர் தனது திருத்தந்தையின் ஆணை ஓலையின் பிரதியைத் தீயிட்டுக் கொளுத்தினார்.
1541 – இங்கிலாந்து மன்னர் எட்டாம் என்றியின் மனைவியும் அரசியுமான கேத்தரீன் உடன் தகாத உறவு வைத்திருந்தமைக்காக தோமசு கல்பெப்பர், கோடரியால் வெட்டப்பட்டும் ,பிரான்சிசு டெரெகம் தூக்கிலிடப்பட்டும் இறந்தனர்.
1655 – யாழ்ப்பாணத்தின் போர்த்துக்கேய ஆளுநர் அன்டோனியோ டி மெனேசா மன்னாரில் இருந்து கொழும்பு செல்லும் வழியில் முகத்துவாரம் என்னும் இடத்தில் டச்சுப் படைகளினால் சிறைப் பிடிக்கப்பட்டார்.
1684 – ஐசாக் நியூட்டன் புவியீர்ப்பு விதிகளின் கொள்கைகளில் எழுதிய கெப்லரின் விதிகளின் தீர்வுகள் அரச கழகத்தில் எட்மண்டு ஏலியினால் படிக்கப்பட்டது.
1768 – முதலாவது பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் வெளியிடப்பட்டது.
1799 – பிரான்சு மீட்டரை அதிகாரபூர்வ நீள அலகாக அறிவித்தது.
1817 – மிசிசிப்பி ஐக்கிய அமெரிக்காவின் 20வது மாநிலமாக இணைந்தது.
1861 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பு கென்டக்கியை அக்கூட்டமைப்பின் 13-வது மாநிலமாக ஏற்றுக் கொண்டது.
1868 – உலகின் முதலாவது சைகை விளக்குகள் இலண்டனில் வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனைக்கு வெளியே நிறுவப்பட்டன.
1877 – உருசிய-துருக்கி போர்: உருசிய இராணுவம் பிளெவ்னா நகரைக் கைப்பற்றியது. மீதமிருந்த 25,000 துருக்கியப் படைகள் சரணடைந்தன.
1898 – பாரிசு உடன்படிக்கை கையெழுத்திடப்பட்டதை அடுத்து எசுப்பானிய அமெரிக்கப் போர் முடிவுக்கு வந்தது..
1901 – முதலாவது நோபல் பரிசு வழங்கும் நிகழ்வு ஸ்டாக்ஹோம் நகரில் இடம்பெற்றது.
1902 – எகிப்தில் அஸ்வான் அணை திறக்கப்பட்டது.
1902 – தாஸ்மேனியாவில் பெண்களுக்கு வாக்குரிமை வழக்கப்பட்டது.
1906 – அமெரிக்க அரசுத்தலைவர் தியொடோர் ரோசவெல்ட் உருசிய-சப்பானியப் போரை முடிவுக்குக் கொண்டுவந்தமைக்காக [[அமைதிக்கான அமைதிக்கான நோபல் பரிசைப் பெற்றார். இது ஒரு அமெரிக்கர் பெற்ற முதலாவது நோபல் பரிசாகும்.
1909 – செல்மா லோவிசா லேகர்லாவ் இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்ற முதலாவது பெண் என்ற பெருமையைப் பெற்றார்.
1932 – தாய்லாந்து அரசியல்சட்ட முடியாட்சி அரசானது.
1936 – இங்கிலாந்தின் எட்டாம் எட்வர்டு முடிதுறப்பதாக அறிவித்தார்.
1941 – இரண்டாம் உலகப் போர்: மலாயாவுக்குக் கிட்டவாக பிரித்தானியாவின் இரண்டு அரச கடற்படைக் கப்பல்கள் சப்பானியர்களால் மூழ்கடிக்கப்பட்டன.
1941 – இரண்டாம் உலகப் போர்: சப்பானியப் படையினர் பிலிப்பீன்சில் லூசோன் நகரை அடைந்தனர்.
1948 – மனித உரிமைகள் குறித்த அனைத்துலகப் பிரகடனத்தை ஐநா பொதுச் சபை அறிவித்தது. இந்நாள் உலக மனித உரிமைகள் நாள் ஆக அறிவிக்கப்பட்டது.
1949 – சீன உள்நாட்டுப் போர்: மக்கள் விடுதலை இராணுவம் செங்டூ மீதான தாக்குதலை ஆரம்பித்தது. சங் கை செக்கும் அவரது அரசும் சீனக் குடியரசுக்குப் பின்வாங்கினர்.
1953 – பிரித்தானியப் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்றார்.
1963 – சான்சிபார் பிரித்தானியாவிடம் இருந்து விடுதலை பெற்று, சுல்தான் சாம்சிதுய் பின் அப்துல்லாவின் கீழ் அரசியல்சட்ட முடியாட்சி அரசைப் பெற்றது.
1978 – அரபு-இசுரேல் முரண்பாடு: இசுரேல் பிரதமர் பெகின், எகிப்தியத் தலைவர் அன்வர் சாதாத் கூட்டாக அமைதிக்கான நோபல் பரிசைப் பெற்றனர்.
1983 – அர்கெந்தீனாவில் அரசுத்தலைவர் அராவூஃப் அல்போன்சின் தலைமையில் மக்களாட்சி அமைக்கப்பட்டது.
1984 – ஐக்கிய நாடுகள் பொதுச் சபை சித்திரவதைக்கு எதிரான ஐ.நா உடன்படிக்கையை ஏற்றுக் கொண்டது.
1989 – மங்கோலியா கம்யூனிசத்தில் இருந்து மக்களாட்சிக்கு அமைதியாக மாற்றம் பெற்றது.
2006 – ஈழப்போர்: வாகரை, மாங்கேணியில் இலங்கைப் படையினரின் எறிகணைத் தாக்குதலில் 17 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
2016 – துருக்கி, இசுதான்புல் நகரில் உதைபந்தாட்ட அரங்கில் இரண்டு குண்டுகள் வெடித்ததில் 38 பேர் கொல்லப்பட்டனர், 166 பேர் காயமடைந்தனர்
7 minute ago
18 minute ago
25 minute ago
27 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
18 minute ago
25 minute ago
27 minute ago