Ilango Bharathy / 2021 டிசெம்பர் 06 , மு.ப. 12:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
1907 : மேற்கு வர்ஜீனியாவில் மொனொங்கா என்ற இடத்தில் நிலக்கரிச் சுரங்கம் ஒன்றில் இடம்பெற்ற வெடிவிபத்தில், 362 தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர்.
1916 : முதலாம் உலகப் போர் - மைய சக்தி நாடுகள் புக்கரெஸ்ட் நகரைக் கைப்பற்றின.
1917 : முதலாம் உலகப் போர் - அமெரிக்காவின் யாக்கோப் யோன்ஸ் என்ற போர்க் கப்பல் ஜேர்மனி நீர்மூழ்கிக் குண்டு வைத்துத் தகர்த்து மூழ்கடித்தது.
1917 : பின்லாந்து சோவியத் ரஷ்யாவிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.
1917 : கனடாவின் நோவா ஸ்கோசியாவில் ஆலிபாக்ஸ் துறைமுகத்தில் ஆயுதக் களஞ்சியக் கப்பல் ஒன்று வெடித்ததில், 1,900 பேர் உயிரிழந்தனர். நகரத்தின் பெரும் பகுதி அழிந்தது.
1921 : இங்கிலாந்துக்கும் அயர்லாந்துக்கும் இடையில் இலண்டனில் நட்புறவு ஒப்பந்தம் கையெழுத்தாகியது.
1922 : ஐரிய சுதந்திர நாடு உருவானது.
1928 : கொலம்பியாவில் ஒரு மாத கால வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டவர்கள் மீது அரசுப் படைகள் தாக்குதல் நடத்தியதில் பலர் கொல்லப்பட்டனர்.
1941 : இரண்டாம் உலகப் போர் - ஐக்கிய இராச்சியமும் கனடாவும் பின்லாந்து மீது போரை அறிவித்தன..
1957 : வங்கார்ட் விண்கலம் ஏவப்படுகையில் வெடித்ததை அடுத்து பூமியின் சுற்றுவட்டத்துக்கு அமெரிக்கா தனது முதலாவது செயற்கைக்கோள் அனுப்பும் திட்டம் நிறைவேறவில்லை.
1971 : இந்தியா வங்காள தேசத்தை அங்கிகரித்ததைத் தொடர்ந்து, பாக்கிஸ்தான் இந்தியாவுடனான அனைத்து தூதரக உறவுகளையும் துண்டித்தது. 1971 இந்திய - பாக்கிஸ்தான் போர் வெடித்தது.
1977 : தென்னாபிரிக்கா 'பொப்புதட்ஸ்வானா'வுக்கு விடுதலை அளித்தாலும் எந்த நாடும் அதனை அங்கரிக்கவில்லை.
1989 : மொண்ட்ரியாலில் ஏக்கோல் கல்வி நிலையத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு நிகழ்வில், 14 இளம் பெண்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
1991 : குரோவாசியாவில் துப்ரோவ்னிக் நகர் மீது யுகொஸ்லாவிய மக்கள் இராணுவம் குண்டுத் தாக்குதல்களை நடத்தியது.
1992 : அயோத்தியாவில் இராமர் பிறப்பிடத்தில் கட்டப்பட்ட பாபர் மசூதி இடிக்கப்பட்டதை அடுத்து இடம்பெற்ற கலவரங்களில் 1,500 பேர் வரை உயிரிழந்தனர்.
1997 : சைபீரியாவில் ரஷ்ய சரக்கு விமானம் ஒன்று குடிமனைத் தொடர் ஒன்றில் மோதியதில் 67 பேர் உயிரிழந்தனர்.
2005 : ஈரானின் இராணுவ சரக்கு விமானம் ஒன்று தெகுரானில் பத்து-மாடி குடிமனைக் கட்டடம் ஒன்றில் மோதியதில் விமானத்தில் இருந்த அனைத்து 84 பேரும் தரையில் 44 பேரும் உயிரிழந்தனர்.
2005 : சீனாவின் டொங்சூ என்ற இடத்தில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது பல கிராம மக்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
2006 : செவ்வாய்க் கோளில் இருந்து மார்ஸ் குளோபல் சேர்வயர் அனுப்பிய படங்களில் இருந்து அங்கு நீர் திரவ நிலையில் இருப்பதை உறுதிப்படுத்தியதாக நாசா அறிவித்தது.
2017 : எருசலேம் நகரை இஸ்ரேலின் தலைநகராக அமெரிக்க அரசுத்தலைவர் டோனால்ட் டிரம்ப்பின் நிருவாகம் அதிகாரபூர்வமாக அறிவித்தது.
1935 : சாவித்திரி, தென்னிந்தியத் திரைப்பட நடிகை பிறந்த தினம்.
7 hours ago
06 Nov 2025
06 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
06 Nov 2025
06 Nov 2025