Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Ilango Bharathy / 2022 பெப்ரவரி 02 , மு.ப. 12:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
1141 – லிங்கன் என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் இங்கிலாந்து மன்னர் ஸ்ட்டீவன் தோற்கடிக்கப்பட்டு பேரரசி மெட்டில்டாவின் படைகளினால் கைதுசெய்யப்பட்டார்.
1822 – பிரித்தானிய இலங்கையின் ஆளுநராக சேர் எட்வேர்ட் பஜெட் நியமிக்கப்பட்டார்.
1848 – மெக்சிக்கோ-அமெரிக்கப் போர்: குவாடுலுப் கிடால்கோ உடன்படிக்கை எட்டப்பட்டது.
1848 – கலிபோர்னியாவில் தங்கம் தேடுவதற்காக சீனர்கள் கப்பலில் சான் பிரான்சிஸ்கோ வந்திறங்கினார்கள்.
1868 – ஜப்பானிய பேரரசு ஆதரவுப் படைகள் ஒசாக்கா கோட்டையை தோக்குகாவா படைகளிடம் இருந்து கைப்பற்றி அதனை எரித்து சாம்பலாக்கினர்.
1878 – துருக்கியின் மீது கிரேக்கம் போரை அறிவித்தது.
1880 – முதலாவது மின்சார வீதி விளக்குகள் அமெரிக்காவில் இந்தியானாவில் நிறுவப்பட்டன.
1899 – அவுஸ்திரேலியாவின் தலைநகரை சிட்னிக்கும் மெல்பேர்னிற்கும் இடையில் கன்பராவில் அமைப்பதென முதலமைச்சர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.1901 – விக்டோரியா மகாராணியின் இறுதி நிகழ்வுகள் இடம்பெற்றன.
1920 – எஸ்தோனியாவுக்கும் உருசியாவுக்கும் இடையில் அமைதி உடன்பாடு எட்டப்பட்டது.
1943 – இரண்டாம் உலகப் போர்: ஸ்டாலின்கிராட் போரின் பின்னர் கடைசி ஜேர்மனியப் படைகள் சோவியத் ஒன்றியத்திடம் சரணடைந்தன. 91,000 பேர் உயிருடன் பிடிக்கப்பட்டனர்.
1946 – அங்கேரியக் குடியரசு அமைக்கப்பட்டது.
1971 – ஈரநிலங்களின் பாதுகாப்பு, அவற்றின் தாங்குநிலைப் பயன்பாடு தொடர்பான பன்னாட்டு ராம்சர் சாசனம் ஈரானில் கையெழுத்திடப்பட்டது.
1971 – உகாண்டாவில் ஒரு வாரத்தின் முன்னர் இடம்பெற்ற இராணுவப் புரட்சியின் பின்னர் இடி அமீன் அரசுத்தலைவராகத் தன்னை அறிவித்தார்.
1972 – டப்ளினில் பிரித்தானிய தூதரகம் தேசியவாதிகளால் தாக்கி அழிக்கப்பட்டது.
1982 – சிரியாவின் ஹமா நகரில் சிரிய அரசு மேற்கொண்ட தாக்குதல்களில் கிட்டத்தட்ட 10,000 பேர் வரையில் கொல்லப்பட்டனர்.
1989 – ஆப்கான் சோவியத் போர்: ஒன்பது ஆண்டு கால முற்றுகையின் பின்னர் கடைசி உருசியப் படைகள் ஆப்கானித்தானில் இருந்து வெளியேறின.
1990 – தென்னாபிரிக்காவின் இனவொதுக்கல்: தென்னாப்பிரிக்க அரசுத்தலைவர் பிரடெரிக் வில்லியம் டி கிளர்க் ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சியின் தடையை நீக்குவதாகவும், நெல்சன் மண்டேலாவை சிறையில் இருந்து விடுவிக்கவிருப்பதாகவும் நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.
1998 – பிலிப்பீன்சில் விமானம் ஒன்று மலை ஒன்றுடன் மோதியதில் 104 பேர் உயிரிழந்தனர்.
2005 – கனடிய அரசு 2005 சூலை 20 முதல் ஒருபால் திருமணத்தை சட்டபூர்வமாக்கும் குடிமைத் திருமணச் சட்டத்தை அறிமுகப்படுத்தியது.
2012 – பப்புவா நியூ கினியில் பயணிகள் கப்பல் ஒன்று மூழ்கியதில் 146-165 வரையானோர் உயிரிழந்தனர்.
2 hours ago
7 hours ago
15 Sep 2025
15 Sep 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
7 hours ago
15 Sep 2025
15 Sep 2025