Menaka Mookandi / 2016 பெப்ரவரி 13 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
269: காதலர்களை சேர்த்துவைத்து திருமணம் செய்துவைத்த வேலண்டைன் என்ற கத்தோலிக்க ஆயர், படுகொலை செய்யப்பட்டார். இந்நாள், காதலர் தினமாக கொண்டாடப்படுகிறது.
1779: பிரித்தானியாவைச் சேர்ந்த நாடுகாண் கடலோடி ஜேம்ஸ் குக் ஹவாய் தீவில் பழங்குடி இன மக்களால் கொலை செய்யப்பட்டார்.
1849: அமெரிக்க ஜனாதிபதி ஜேம்ஸ் நொக் போல் புகைப்படம் பிடிக்கப்பட்டார். பதவியிலிருக்கும் போது படம்பிடிக்கப்பட்ட அமெரிக்க ஜனாதிபதியொருவர் புகைப்படம் எடுக்கப்பட்டது இதுவே முதல் தடவை.
1876: தொலைபேசிக்கு காப்புரிமை பெறுவதற்கு அலெக்ஸாண்டர் கிறஹம் பெல் விண்ணப்பித்தார்.
1879: பொலிவிய துறைமுகத்தை சிலி படைகள் கைப்பற்றியதையடுத்து 'பசுபிக் யுத்தம்' ஆரம்பமாகியது.
1918: கிறகரியன் கலண்டரை சோவியத் யூனியன் பின்பற்றத் தொடங்கியது.
1919: போலந்து – சோவியத் யூனியன் யுத்தம் ஆரம்பம்.
1920: அமெரிக்க பெண் வாக்காளர் சங்கம் ஆரம்பிக்கப்பட்டது.
1924: ஐ.பி.எம். நிறுவனம் ஸ்தாபிக்கப்பட்டது.
1981: அயர்லாந்து தலைநகர் டப்ளினில் இரவு விடுதியொன்றில் ஏற்பட்ட தீயினால் 48 பேர் பலி.
1989: இஸ்லாமிய மதத்தை அவமதிக்கும் விதமாக சாத்தானின் வசனங்கள் எனும் நூலை எழுதிய சல்மான் ருஷ்டிக்கு ஈரானிய ஆன்மீக தலைவர் ஆயதுல்லா கொமேய்னி மரணதண்டனை விதிக்குமாறு கோரும் 'பத்வாவை' வெளியிட்டார்
1989: ஜிபிஎஸ் திட்டத்தின் 24 செய்மதிகளில் முதலாவது விண்ணில் ஏவப்பட்டது.
1989: யூனியன் கார்பைட் நிறுவனம் 1984 போபால் அழிவிற்காக இந்திய அரசிற்கு 470 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நட்ட ஈடாக வழங்க சம்மதித்தது.
1990: பெங்களூருவில் இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று வீழ்ந்து விபத்துக்குள்ளாகியதில் 92 பேர் கொல்லப்பட்டு 54 பேர் காயங்களுடன் தப்பினர்.
1998: கோயம்புத்தூர் நகரின் பல இடங்களில் குண்டுகள் வெடித்ததில் 58பேர் கொல்லப்பட்டனர். 250பேர் காயமுற்றனர்.
2000: நியர் ஷூமேக்கர் என்ற விண்கலம் 433 ஈரோஸ் என்ற சிறுகோளின் சுற்றுவட்டத்துள் பிரவேசித்தது. சிறுகோள் ஒன்றின் சுற்றுக்குள் சென்ற முதலாவது விண்கலம் இதுவாகும்.
2005: லெபனானின் முன்னாள் பிரதமர் ரஃபீக் ஹரீரி சுட்டுக் கொல்லப்பட்டார்.
2005: பிலிப்பீன்சில் மணிலா நகரில் இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்புகளில் 7பேர் கொல்லப்பட்டு 151பேர் காயமடைந்தனர்.
15 Dec 2025
15 Dec 2025
15 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 Dec 2025
15 Dec 2025
15 Dec 2025