2021 ஒக்டோபர் 26, செவ்வாய்க்கிழமை

வரலாற்றில் இன்று: செப்டெம்பர் 05

Ilango Bharathy   / 2021 செப்டெம்பர் 05 , மு.ப. 12:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

1887: இங்கிலாந்தின் எக்ஸ்டர் நகரில் இடம்பெற்ற தீவிபததில் 186 பேர் பலி.

1960: அமெரிக்க குத்துச் சண்டை வீரர் மொஹமட் அலி (அப்போது கஸியஸ் கிளே) ஒலிம்பிக் குத்துச்சண்டைப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றார்.

1972: ஜேர்மனியின் மூனிச் நகரில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளின்போது 11 இஸ்ரேலிய விளையாட்டு வீரர்களை 'கறுப்பு செப்டெம்பர்' எனும் பலஸ்தீன தீவிரவாதிகள் குழுவினர் பணயக் கைதிகளாக பிடிக்கப்பட்டனர்.

1975:  அமெரிக்க ஜனாதிபதி ஜெரால்ட் போர்ட்டை படுகொலை செய்ய முயற்சிக்கப்பட்டது.

1980: உலகின் மிக நீளமான நெடுஞ்சாலை போக்குவரத்து சுரங்கம் (16 கிலோமீற்றர்) சுவிட்ஸர்லாந்தில் திறந்துவைக்கப்பட்டது.

1986: மும்பையிலிருந்து நியூயோர்க் சென்ற அமெரிக்க விமானமொன்றை தீவிரவாதிகள் கடத்தியதையடுத்து  கராச்சி விமான நிலையத்தில் ஏற்பட்ட மோதலில் 22 பேர் பலி.

1997: அன்னை திரேஸா தனது 87ஆவது வயதில் காலமானார்.

2005: இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவில் விமானமொன்று குடியிருப்பு பகுதியில் வீழ்ந்ததால் விமானத்திலிருந்த 104 பேரும் தரையிலிருந்த 39 பேரும் பலி.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .