2021 நவம்பர் 30, செவ்வாய்க்கிழமை

வரலாற்றில் இன்று : ஒக்டோபர் 9

Ilango Bharathy   / 2021 ஒக்டோபர் 09 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

1900 : குக் தீவுகள் ஐக்கிய இராச்சியத்துடன் இணைக்கப்பட்டது.

1910 : மாறுவேடத்தில் உலகப் பயணம் மேற்கொண்ட பின்னர் வ. வே. சு. ஐயர் புதுச்சேரி திரும்பினார்.

1914 : முதலாம் உலகப் போர் - பெல்ஜியத்தின் ஆண்ட்வெர்ப் நகரம் ஜேர்மனியிடம் வீழ்ந்தது.

1934 :  யுகொசுலாவிய மன்னர் முதலாம் அலெக்சாந்தர், பிரான்சின் வெளிவிவகார அமைச்சர் லூயி பார்த்தோ ஆகியோர் படுகொலை செய்யப்பட்டனர்.

1940 : இரண்டாம் உலகப் போர் - பிரிட்டன் சண்டை - ஜேர்மனியின் லூப்டுவாபே படைகள் இலண்டன் புனித பவுல் பேராலயம் மீது இரவு நேரத்தில் குண்டுகள் வீசின.

1941 :  பனாமாவில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியின் பின்னர் ரிக்கார்டோ டெ லா கார்டியா அரசுத்தலைவரானார்.

1942 : வெஸ்ட்மின்ஸ்டர் சட்டம் 1931 ஆஸ்திரேலியாவின் சுயாட்சியை அங்கீகரித்தது.

1962 : உகாண்டா பொதுநலவாயத்தின் கீழ் விடுதலை பெற்றது.

1963 : வடகிழக்கு இத்தாலியில் இடம்பெற்ற நிலச்சரிவில் 2,000 பேர் கொல்லப்பட்டனர்.

1966 : வியட்நாம் போர் - தென் வியட்நாமில் பின் தாய் நகரில் தென் கொரியப் படைகள் நடத்திய தாக்குதலில் 168 பொது மக்கள் கொல்லப்பட்டனர்.

1967 : சே குவேரா பொலிவியாவில் கைது செய்யப்பட்ட அடுத்த நாள் புரட்சியைத் தூண்டினார் என்ற குற்றச்சாட்டில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

1970 : கம்போடியாவில் கெமர் குடியரசு அறிவிக்கப்பட்டது.

1980 : திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர் வத்திக்கான் நகரில் தலாய் லாமாவைச் சந்தித்தார்.

1981 : பிரான்சில் மரணதண்டனை நிறுத்தப்பட்டது.

1983 : ரங்கூனில் தென் கொரிய அரசுத்தலைவர் சுன் டூ-குவான் மீது நடத்தப்பட்ட குண்டுத்தாக்குதலில் அவர் உயிர் தப்பினார். நான்கு அமைச்சர்கள் உட்பட 17 பேர் கொல்லப்பட்டனர்.

1987 :  யாழ்ப்பாணத்தில் நிதர்சனம் தொலைக்காட்சி நிறுவனம் மற்றும் முரசொலி நாளிதழ் கட்டிடங்களை இந்திய இராணுவத்தினர் தகர்த்தனர்.

2001 :  இந்தியாவில் பாவேந்தர் பாரதிதாசனுக்கு அஞ்சல்தலை வெளியிடப்பட்டது.

2004 : ஆப்கானித்தானில் முதற்தடவையாக பொதுத் தேர்தல் இடம்பெற்றது.

2006 : வட கொரியா தனது முதலாவது அணுவாயுதச் சோதனையை வெற்றிகரமாக நிகழ்த்தியது.

2012 : பாக்கித்தானிய தாலிபான்கள் மலாலா யூசப்சையிவைப் படுகொலை செய்ய எடுத்த முயற்சி தோல்வியடைந்தது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .