2021 ஜூலை 28, புதன்கிழமை

வரலாற்றில் இன்று: ஜூன் 02

Ilango Bharathy   / 2021 ஜூன் 02 , மு.ப. 12:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

1886: அமெரிக்க ஜனாதிபதி குரோவர் கிளீவ்லன்ட், பிரான்செஸ் போல்சொம் எனும் பெண்ணை வெள்ளை மாளிகையில் திருமணம் செய்தார். வெள்ளை மாளிகையில் வைத்து திருமணம் செய்த முதல் ஜனாதிபதி இவராவார்.

1946: இத்தாலியில் மன்னராட்சியை ஒழித்து குடியரசாக்குவதற்கு ஆதரவாக சர்வஜன வாக்கெடுப்பில் மக்கள் வாக்களித்தனர் .

1953: பிரித்தானிய மகா ராணியாக இரண்டாம் எலிஸபெத் முடிசூடினார்.

1979: பாப்பரசர் இரண்டாம் அருளப்பர் சின்னப்பர், தனது சொந்த நாடான போலந்துக்கு விஜயம் செய்தார். கம்யூனிஸ்ட் நாடான போலந்துக்கு விஜயம் செய்த முதலாவது பாப்பரசர் இவராவார்.

1985: பெல்ஜியத்தில் கால்பந்தாட்டப் போட்டியொன்றில் ஏற்பட்ட கலவரத்தில் 39 பேர் பலியானதையடுத்து, இங்கிலாந்து கழகங்கள் இங்கிலாந்துக்கு வெளியே ஐரோப்பாவில் போட்டிகளில் பங்குபற்ற ஐரோப்பிய கால்பந்தாட்டச் சங்கம் தடை விதித்தது.

1999: பூட்டானில் தொலைக்காட்சி ஒளிபரப்பு ஆரம்பிக்கப்பட்டது.

2003: வேறொரு கோளுக்கான (செவ்வாய்) மார்ஸ் எக்ஸ்பிரஸ் என்ற தனது முதலாவது விண்கலத்தை ஐரோப்பிய ஆய்வு மையம் ஈசா கசக்ஸ்தானில் இருந்து ஏவியது.

2012: 2011 இடம்பெற்ற எகிப்திய புரட்சியின் போது ஆர்ப்பாட்டக்காரர்கள் படுகொலை செய்யப்பட்டதற்கு காரணமானார் என்ற குற்றச்சாட்டில் எகிப்தின் முன்னாள் ஜனாதிபதி ஹொஸ்னி முபாரக்குக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

2014: இந்தியாவின் 29ஆவது மாநிலமாக தெலுங்கனா பிரகடனப்படுத்தப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .