2021 செப்டெம்பர் 22, புதன்கிழமை

வரலாற்றில் இன்று: ஜூலை 12

Ilango Bharathy   / 2021 ஜூலை 12 , மு.ப. 12:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

1453: இங்கிலாந்து மன்னர் 8 ஆம் ஹென்ரி, தனது ஆறாவது மனைவி கத்தரினை திருமணம் செய்தார்.

1806: பதினாறு ஜேர்மன் மாநிலங்கள், புனித ரோமப் பேரரசில் இருந்து விலகி, ரைன் கூட்டமைப்பு என்ற புதிய அரசை நிறுவினர்.

1918: ஜப்பானிய யுத்த கப்பலான 'கவாச்சி' மூழ்கியதால்  621பேர் பலி.

1943: உலக வரலாற்றில் இராணுவத் தாங்கிகளுக்கிடையிலான மிகப்பெரிய யுத்தம், சோவியத் மற்றும் ஜேர்மன் படைகளுக்கிடையில் ரஷ்யாவின் புரோகொரோவா நகரத்தில் இடம்பெற்றது. இச்சமரில் சுமார் 500 தாங்கிகள் சேதமடைந்தன.

1961: இந்தியாவின் புனே நகரில் ஏற்பட்ட பாரிய வெள்ளத்தினால் சுமார் ஒரு இலட்சம் குடும்பங்கள் இடம்பெயர்ந்தன.

2006: தமிழ் கணிமைக்கு சிறந்த பங்களிப்புக்களை வழங்கிய உமர் தம்பி இறப்பு.

2011: நெப்டியூன் கிரகம் 23.09.1846ஆம் திகதி கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் அது, முதல் தடவையாக சூரியனை வலம்வந்து முடித்தது

2021: பிரதமர் மஹிந்த ராஜபக்சவை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா சந்தித்தார். முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரான பாரத ல­க்ஷ்மன் பிரே­மச்சந்­திர கொலை வழக்கில், மரணத் தண்டனை விதிக்கப்பட்ட  துமிந்த சில்வா  ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ்  விடுவிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .