Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Ilango Bharathy / 2022 ஒக்டோபர் 26 , மு.ப. 12:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
1905 : நோர்வே பிரிந்து சென்றதை சுவீடன் அங்கிகரித்தது.
1909 : ஜப்பானின் பிரதமர் ஈட்டோ, ரொபூமி மஞ்சூரியா, கார்பின் ரயில் நிலையத்தில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
1917 : முதலாம் உலகப் போர் - இத்தாலி கபொரேட்டொ என்ற இடத்தில் ஜேர்மனி மற்றும் ஆஸ்திரியா நாடுகளுடன் மோதி கடும் தோல்வியைச் சந்தித்தது.
1917 : முதலாம் உலகப் போர் - பிரேஸில் மைய நாடுகளுக்கு எதிராகப் போரில் இறங்கியது.
1936 : முதலாவது மின்னியற்றி ஊவர் அணையில் முழுமையாக இயங்கியது.
1942 : இரண்டாம் உலகப் போர் - சான்டா குரூஸ் தீவுகளில் இரண்டு அமெரிக்க வான்படைக் கப்பல்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன.
1947 : சம்மு - காஸ்மீர் மகாராஜா இந்தியாவுடன் தனது இராச்சியத்தை இணைக்கச் சம்மதித்தார்.
1947 : ஈராக்கிலிருந்து பிரித்தானிய இராணுவம் வெளியேறியது.
1955 : ஆஸ்திரியாவில் கடைசி கூட்டுப்படைகள் வெளியேறின. ஆஸ்திரியா நிரந்தர நடுநிலை நாடாக தன்னை அறிவித்தது.
1956 : ரஷ்ய இராணுவம் ஹங்கேரியை முற்றுகையிட்டது.
1958 : பான் அமெரிக்கன் ஏர்வேய்ஸ் போயிங் 707 இன் முதலாவது வணிக ரீதியான பறப்பை நியூயோர்க் முதல் பாரிஸ் வரை மேற்கொண்டது.
1967 : முகம்மத் ரிசா ஷா பஹ்லவி ஈரானின் பேரரசராகத் தன்னை அறிவித்து, பேரரசியாக தனது மனைவி ஃபாராவுக்கு முடிசூட்டினார்.
1968 : சோவியத் விண்ணோடி கியோர்கி பெரிகவோய் சோயூசு 3 விண்கலத்தில் நான்கு - நாள் பயணத்தை ஆரம்பித்தார்.
1977 : பெரியம்மை நோய் தாக்கிய கடைசி நோயாளி சோமாலியாவில் அடையாளம் காணப்பட்டார். உலக சுகாதார அமைப்பு இந்நாளை பெரியம்மையின் கடைசி நாளாக அறிவித்தது.
1979 : தென் கொரியா அரசுத்தலைவர் பார்க் சோங்-ஹீ இராணுவத் தளபதி கிம் ஜே - கியூ என்பவனால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
1984 – 'பேபி ஃபே' பபூன் என்ற மனிதக் குரங்கிலிருந்து இருதய மாற்றைப் பெற்று 21 நாட்கள் உயிர் வாழ்ந்தது.
1985 : ஆஸ்திரேலிய அரசு ஊலூரூவின் உரிமையை உள்ளூர் பழங்குடியினரிடம் கையளித்தது.
1994 : ஜோர்தான் மற்றும் இஸ்ரேல் அமைதி ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டன.
1994 : பெர்மாவின் கடைசித் தேற்றம் அண்ட்ரூ வைல்ஸ் என்பவரால் நிறுவப்பட்டது என அறிவிக்கப்பட்டது.
1995 : இஸ்ரேல் - பாலத்தீனப் பிணக்கு: இசுலாமிய ஜிகாட் தலைவர் ஃபாதி ஷிக்காகி மோல்டாவில் உள்ள விடுதி ஒன்றில் மொசார்ட் அமைப்பினரால் கொல்லப்பட்டார்.
2000 : ஐவரி கோஸ்ட்டின் அதிபர் ரொபேர்ட் கூயெய் பதவியிறக்கப்பட்டு லோரெண்ட் குபாக்போ என்பவர் அதிபரானார்.
2001 : ஐக்கிய அமெரிக்கா 'அமெரிக்க தேசப்பற்று சட்டத்தை' நிறைவேற்றியது.
2002 : மொஸ்கோவில் நாடக மாளிகை ஒன்றில் செச்னியா தீவிரவாதிகள் மூன்று நாட்களாகப் பிடித்து வைத்திருந்த பணயக் கைதிகள் விவகாரம் முடிவுக்கு வந்தது. 150 பணயக் கைதிகளும் 50 தீவிரவாதிகளும் கொல்லப்பட்டனர்.
2003 : கலிபோர்னியாவில் இடம்பெற்ற தீயில் 15 பேர் கொல்லப்பட்டு 250,000 ஏக்கர், மற்றும் 2,200 வீடுகள் சான் டியேகோ நகரில் அழிந்தன.
2015 : 7.5 அளவு நிலநடுக்கம் ஆப்கானித்தானின் இந்து குஷ் மலைப் பகுதியைத் தாக்கியதில் 398 பேர் கொல்லப்பட்டு, 2,536 பேர் காயமடைந்தனர்.
48 minute ago
3 hours ago
22 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
48 minute ago
3 hours ago
22 Oct 2025