2021 ஜூலை 28, புதன்கிழமை

வரலாற்றில் இன்று: மே 18

Editorial   / 2021 மே 18 , மு.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

1498: போர்துக்கேய மாலுமி வாஸ்கொடகாமா இந்தியாவின் கோழிகோடு துறைமுகத்தை அடைந்தார்.

1756: பிரிட்டனுக்கும் பிரான்ஸுக்கும் இடையில் 7 ஆண்டு போர் தொடங்கியது.

1803: பிரான்ஸுக்கு எதிராக பிரிட்டன் போர் பிரகடனம் செய்தது.

1804: நெப்போலியன் போனபார்ட் பிரான்ஸின் மன்னராக பிரெஞ்சு நாடாளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்டார்.

1917: அமெரிக்காவில் இராணுவத்திற்கு கட்டாய ஆட்சேர்ப்பு மேற்கொள்வதற்கு அந்நாட்டு ஜனாதிபதிக்கு அதிகாரம் வழங்கப்பட்டது.

1974: இந்தியா தனது முதலாவது அணுகுண்டு சோதனையை நடத்தியது.

2006: இந்து ராஜ்யமான நேபாளத்தில் முடியாட்சியை நீக்கவும் மதசார்பற்ற நாடாக மாற்றவும் நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

2009: தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் பலியானதாக இலங்கை அரசாங்கம் அறிவித்தது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .