Menaka Mookandi / 2014 ஜனவரி 02 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
1431: பிரான்ஸில் ஆங்கிலப் படைகளை எதிர்த்து போராடிய ஜோன் ஒவ் ஆர்க் எனும் சிறுமி ஆயர் பியர் கௌசோனிடம் விசாரணைக்காக ஒப்படைக்கப்பட்டாள்.
1496: லியார்னோடா டாவின்சி மேற்கொண்ட பறக்கும் இயந்திர சோதனை தோல்வியுற்றது..jpg)
1521: பாப்பரசர் 10 ஆம் லியோ, மார்டின் லூதரை சமூகப் பிரஷ்ட் செய்தார்.
1815: பிரஷ்யா மற்றும் ரஷ்யாவுக்கு எதிராக ஆஸ்திரியா, பிரிட்டன், பிரான்ஸ் ஆகியன ரகசிய பாதுகாப்புக் கூட்டணி அமைத்தன.
1925: இத்தாலியில் பெனிட்டோ முசோலினி அதிகாரத்திற்கு வந்தார்.
1947: அமெரிக்க நாடாளுமன்ற விவாதங்கள் முதல் தடவையாக தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டன.
1956: ஈபில் கோபுரத்தின் மேற்பகுதி தீயினால் சேதமடைந்தது.
1957: ஹமில்டன் கைக்கடிகார நிறுவனம் முதலாவது இலத்திரனியல் கைக்கடிகாரத்தை அறிமுகப்படுத்தியது.
1958: மேற்கிந்திய கூட்டமைப்பு ஸ்தாபிக்கப்பட்டது.
1959: அலாஸ்கா, அமெரிக்காவின் 49 ஆவது மாநிலமாக்கப்பட்டது.
1961: கியூபாவுடனான உறவை அமெரிக்கா துண்டித்தது.
1962: பாப்பரசர் 23 ஆம் அருளப்பர் பிடெல் காஸ்ட்ரோவை சமூகப் பிரஷ்டம் செய்தார்.
1990: பனாமா முன்னாள் ஜனாதிபதி மனுவல் நொரீகா அமெரிக்கப் படைகளிடம் சரணடைந்தார்.
1993: மொஸ்கோவில் அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ், ரஷ்ய ஜனாதிபதி பொரிஸ் யெல்ட்ஸின் ஆகியோர் அணுவாயுத குறைப்பு ஒப்பந்தமொன்றில் கையெழுத்திட்டனர்.
1994: ரஷ்யாவில் விமான விபத்தொன்றில் 125 பேர் பலி.
1999: செவ்வாய் கிரகத்தை நோக்கி மார்ஸ் போலார் லாண்டர் விண்கலம் ஏவப்பட்டது.
2004: எகிப்திய விமானமொன்று செங்கடலில் வீழ்ந்ததால் 148 பேர் பலி.
17 Dec 2025
17 Dec 2025
17 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 Dec 2025
17 Dec 2025
17 Dec 2025