Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 21, புதன்கிழமை
Menaka Mookandi / 2013 நவம்பர் 06 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
1916: ஜெனட் ஜாக்ஸன் அமெரிக்க நாடாளுமன்ற அங்கத்தவராக தெரிவு செய்யப்பட்ட முதலாவது பெண்ணானார்.
1919: சோவியத் யூனியனின் ஒக்டோபர் புரட்சியின் இரண்டாவது வருட நிறைவையொட்டி அமெரிக்காவில் கம்யூனிஸ்ட்டுகள் என சந்தேகிக்கப்பட்ட சுமார் 10000 பேர் கைது செய்யப்பட்டனர்.
1941: சோவியத் யூனியனின் மருத்துவ கப்பலொன்று ஜேர்மனியின் தாக்குதலினால் மூழ்கடிக்கப்பட்டது. 5000 பேர் பலி.
1944: பிராங்க்ளின் டி ரூஸ்வெல்ட் நான்காவது தடவையாக அமெரிக்க ஜனாதிபதியாக தெரிவாகி சாதனை படைத்தார். இதைத் தொடர்ந்தே ஒருவர் 2 தடவைகளுக்கு மேல் அமெரிக்க ஜனாதிபதியாக பதவி வகிக்க முடியாதென்ற சட்டம் கொண்டுவரப்பட்டது.
1956: சுயஸ்கால்வாய் நெருக்கடியின்போது பிரிட்டன், பிரான்ஸ், இஸ்ரேல் ஆகிய நாடுகள் தமது படைகளை எகிப்திலிருந்து உடனடியாக வாபஸ் பெற வேண்டுமென ஐ.நா.பொதுச்சபை தீர்மானம் நிறைவேற்றியது.
1991: அமெரிக்க கூடைப்பந்தாட்ட நட்சத்திரமான மெஜிக் ஜோன்ஸன், தனக்கு எச்.ஐ.வி. பாதிப்பு இருப்பதாக அறிவித்து போட்டிகளிலிருந்து ஓய்வுபெற்றார்.
1994: அமெரிக்காவின் வடகரோலினா பல்கலைக்கழகத்தின் மாணவர் வானொலி நிலையத்தினால் உலகின் முதலாவது இணைய வானொலி ஒலிபரப்பு ஆரம்பிக்கப்பட்டது.
2000: ஹிலாரி கிளிண்டன் அமெரிக்க முதற்பெண்மணியாக விளங்கியபோதே நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவான முதலாவது நபரானார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
7 hours ago
20 May 2025