2025 மே 19, திங்கட்கிழமை

வரலாற்றில் இன்று: செப்டெம்பர் 06

Kogilavani   / 2015 செப்டெம்பர் 06 , மு.ப. 12:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

1930: ஆர்ஜென்டின ஜனாதிபதி ஹிபோலிட்டோ வைரிகோயென் இராணுவப் புரட்சி மூலம் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.

1939: 2 ஆம் உலக யுத்தத்தில் ஜேர்மனிக்கு எதிராக தென்னாபிரிக்கா போர்ப் பிரகடனம் செய்தது.

1946:  அமரர் டி.எஸ்.சேனநாயக்காவினால் ஐக்கிய தேசியக் கட்சி ஆரம்பிக்கப்பட்டது.

1952:கனடாவில் தொலைக்காட்சி ஒளிபரப்பு ஆரம்பிக்கப்பட்டது.

1970: ஐரோப்பாவிலிருந்து நியூயோர்க்கிற்கு சென்றுகொண்டிருந்த இரு விமானங்கள் ஒரே நேரத்தில் பலஸ்தீன தீவிரவாதிகளால் ஜோர்தானுக்கு கடத்தப்பட்டன.

1972: ஜேர்மனியின் மூனிச் நகரில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளின்போது 'கறுப்பு செப்டெம்பர்' எனும் பலஸ்தீன தீவிரவாத குழுவினால் கடத்தப்பட்டிருந்த இஸ்ரேலிய விளையாட்டு வீரர்கள், பயிற்றுநர்கள் 9 பேர் மீட்பு முயற்சியின்போது கடத்தல்காரர்களால் கொல்லப்பட்டனர். முதல்நாள் நடந்த கடத்தலின்போது இஸ்ரேலிய விளையாட்டு வீரர்கள் இருவர் கொல்லப்பட்டனர்.

1983: சோவியத் யூனியன் வான்பரப்பில் ஊடுருவிய கொரிய பயணிகள் விமானமொன்றை சுட்வடுவீழ்த்தியதை சோவியத் யூனியன் ஒப்புக்கொண்டது. அது பயணிகள் விமானம் என சோவியத் யுத்த விமானத்தின் விமானி அறிந்திருக்கவில்லை என சோவியத் யூனியன் கூறியது.

1982: அமெரிக்காவில் இடம்பெற்ற விமான விபத்தொன்றில் 31 பேர் பலி.

1991: ரஷ்யாவின் லெனின்கிராட் நகரத்தின் பெயர் மீண்டும் சென் பீற்றர்ஸ்பேர்க் என மாற்றப்பட்டது.

1997: இளவரசி டயானாவின் இறுதிச்சடங்கு நடைபெற்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X