2025 மே 19, திங்கட்கிழமை

வரலாற்றில் இன்று: செப்டெம்பர் 07

Kogilavani   / 2015 செப்டெம்பர் 07 , மு.ப. 04:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

1652: தாய்வானில் டச்சு ஆட்சிக்கு எதிராக 15,000 விவசாயிகளும் ஆயுதக் குழுவினரும் கிளர்ச்சி நடத்தினர்.

1776: உலகின் முதலாவது நீர்மூழ்கித் தாக்குதல் அமெரிக்காவில் இடம்பெற்றது.

1895: றக்பி லீக் உதைபந்தாட்டத் தொடரின் முதலாவது போட்டி இங்கிலாந்தில் நடைபெற்றது.

1921: முதலாது அமெரிக்க அழகுராணி போட்டி நடைபெற்றது.

1940: லண்டன் நகரம் மீது ஜேர்மனிய விமானங்கள் குண்டுவீச ஆரம்பித்தன. தொடர்ச்சியாக 76 இரவுகள் குண்டுகள் வீசப்பட்டதால் சுமார் 43,000 பேர் பலியாகினர்.

1953: சோவியத் யூனியன் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச்செயலாளராக நிகட்டா குருசேவ் பதவியேற்றார்.

1965: இந்தியாவுடனான எல்லையில் தனது துருப்புக்களின் எண்ணிக்கை விஸ்தரிக்கப்படும் என சீனா அறிவித்தது.

1999: ஏதென்ஸ் நகரில் இடம்பெற்ற பூகம்பத்தினால் 143 பேர் பலி, 50,000 பேர் வீடுகளை இழந்தனர்.

2005: எகிப்தில் முதலாவது ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X