2025 மே 08, வியாழக்கிழமை

வரலாற்றில் இன்று: செப்டெம்பர் 12

Menaka Mookandi   / 2016 செப்டெம்பர் 11 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

கி.மு 490: கிரேக்கம், மரதன் என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் பாரசீகத்தைத் தோற்கடித்தது. பிடிப்பிடஸ் என்ற கிரேக்க வீரன் இவ்வெற்றிச் செய்தியைத் தெரிவிக்க நெடுந்தூரம் ஓடினான். மரதன் ஓட்டப்போட்டிக்கு இதனாலேயே இப்பெயர் இடப்பட்டது.

1609: ஹட்சன் ஆற்றை, ஹென்றி ஹட்சன் கண்டுபிடித்தார்.

1683: ஒட்டோமான் பேரரசைத் தோற்கடிக்கும் முயற்சியில் பல ஐரோப்பிய நாடுகள் வியெட்னாவில் இடம்பெற்ற போரில் ஒன்றிணைந்தன.

1759: பிரித்தானியப் படையினர், கியூபெக் நகரைக் கைப்பற்றினர்.

1848: கூட்டமைப்பு ஆட்சியை, சுவிட்சர்லாந்து நடைமுறைப்படுத்தியது.

1857: வட கரொலைனாவில் பயணிகள் கப்பல் மூழ்கியதில் 426பேர் கொல்லப்பட்டனர். இக்கப்பலில் 13 - 15 தொன் தங்கம் கொண்டு செல்லப்பட்டது.

1890: ரொடீசியாவில் சலிஸ்பரி நகரம் அமைக்கப்பட்டாது.

1933: அணுக்கரு தொடர்வினை குறித்த கருத்தை முதன் முதலாக லியோ சிலார்ட் அறிவித்தார்.

1940: நியூ ஜேர்சியில், தொழிற்சாலை ஒன்றில் நிகழ்ந்த வெடிவிபத்தில் 51 பேர் கொல்லப்பட்டு 200 பேர் காயமுற்றனர்.

1942: இரண்டாம் உலகப் போர் - நட்பு நாடுகளின் போர்வீரர்கள், இத்தாலியப் போர்க்கைதிகள் மற்றும் பொதுமக்களை ஏற்றிச்சென்ற லக்கோனியா என்ற கப்பல் மேற்கு ஆபிரிக்காவில் ஜெர்மனியர்களால் தாக்கப்பட்டு மூழ்கியது.

1943: இரண்டாம் உலகப் போர் - இத்தாலிய சர்வாதிகாரி முசோலினி வீட்டுக்காவலிலிருந்து ஜெர்மனிய படைத்தளபதி "ஒட்டோ ஸ்கோர்செனி என்பவனால் விடுவிக்கப்பட்டார்.

1948: முகமது அலி ஜின்னா மறைந்த அடுத்த நாள், இந்திய இராணுவம், பாகிஸ்தானின் ஐதராபாத் மாநிலத்தினுள் நுழைந்தது. ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர்.

1953: நிக்கிட்டா குருசேவ் சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1959: லூனா 2 விண்கலத்தை சோவியத் ஒன்றியம் ஏவியது. சந்திரனை அடைந்த முதலாவது விண்கலம் இதுவாகும்.

1974: எதியோப்பியாவில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியில், மன்னர் ஹைலி செலாசி பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.

1977: தென்னாபிரிக்காவின் நிறக் கொள்கைக்கெதிராக போராடிய ஸ்டீவ் பைக்கோ, காவற்துறையினரின் காவலில் இருந்தபோது கொல்லப்பட்டார்.

1980: துருக்கியில் இராணுவப் புரட்சி இடம்பெற்றது.

1992: நாசாவின் எண்டெவர் விண்ணோடம் கறுப்பு - அமெரிக்கப் பெண்ணான மேய் சரோல் ஜமிசன் என்பவருடன் விண்ணுக்கு ஏவப்பட்டது.

2001: அவுஸ்திரேலியாவின் மாநிலங்களுக்கு இடையேயான முதலாவது பயணிகள் போக்குவரத்து விமான சேவையான ஆன்செட் ஆஸ்திரேலியா மூடப்பட்டது. 10,000 பேர் வேலையிழந்தனர்.

2005: காசாப் பகுதியில் இருந்து, இஸ்ரேல் தனது படைகளை முற்றாக விலக்கியது.

2005: ஹொங்கொங்கில், ஹொங்கொங் டிஸ்னிலாண்ட் திறக்கப்பட்டது.

2006: திருத்தந்தை பதினாறாம் ஆசீர்வாதப்பர், ஜேர்மனியில் நிகழ்த்திய உரையின் போது "தீங்கு விளைவிக்கிற மற்றும் மனிதத் தன்மையற்ற விடயங்களையே நபிகள் நாயகம் இவ்வுலகுக்கு அளித்தார்" என்று தெரிவித்தார். இதற்கு இஸ்லாம் மக்கள் எதிர்ப்புத் தெரிவித்ததை அடுத்து திருத்தந்தை மன்னிப்புக் கேட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X