Janu / 2024 ஏப்ரல் 05 , மு.ப. 01:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
1792: அமெரிக்கா ஜனாதிபதி ஜோர்ஜ் வாஷிங்டன் சட்டமூலமொன்றின் மீது தனது வீட்டோ அதிகாரத்தை பிரயோகப்படுத்தினார். அமெரிக்காவில் இந்த அதிகாரம் பயன்படுத்தப்பட்டமை இதுவே முதல்தடவையாகும்.
1879: பொலிவியா, பெருவுக்கு எதிராக சிலி போர் தொடுத்தது.
1930: இந்தியாவில் பிரித்தானியரின் சட்டத்தை மீறி மகாத்மா காந்தி உப்பு தயாரிக்கும் போராட்டத்தை ஆரம்பித்தார்.
1932: பின்லாந்தில் மதுபான தடை நீக்கப்பட்டது.
1942: 2ஆம் உலக யுத்தத்தின்போது ஜப்பானிய கடற்படை விமானங்கள் கொழும்பில் குண்டுவீசின. இதன்போது பிரித்தானிய கடற்படை கப்பல்களான எம்.எம்.எஸ். கோர்ன்வால், எச்.எம்.எஸ் டோர்சென்ஷயர் ஆகியன மூழ்கடிக்கப்பட்டன.
1955: பிரிட்டனில் பிரதமர் பதவியிலிருந்து வின்ஸடன் சர்ச்சில் ராஜினாமா.
1956: கியூப ஜனாதிபதிக்கு எதிராக பிடெல் காஸ்ட்ரோ போர் பிரகடனம்.
1956: எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்க இலங்கையின் பிரதமரானார்.
1971: சிறிமாவோ பண்டாரநாயக்க தலைமையிலான ஐக்கிய முன்னணி அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) கிளர்ச்சியை ஆரம்பித்தது.
1976: மக்கள் சீனக் குடியரசில் தியனன்மென் சதுக்கத்தில் மாபெரும் ஆர்ப்பாட்ட நிகழ்வு இடம்பெற்றது.
1981: தமிழீழப் போராளிகளான குட்டிமணி, தங்கத்துரை, ஜெகன் ஆகியோர் இலங்கை இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டனர்.
1998: அகாசி கைக்ஜோ, உலகின் மிகப் பெரிய தொங்கு பாலம், ஜப்பானில் 3.8 பில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவில் அமைக்கப்பட்டது.
17 minute ago
24 minute ago
34 minute ago
41 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
24 minute ago
34 minute ago
41 minute ago