2024 மார்ச் 28, வியாழக்கிழமை

வரலாற்றில் இன்று: ஏப்ரல் 14

Editorial   / 2021 ஏப்ரல் 14 , மு.ப. 04:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

1845: ஆஸ்திரியாவிலிருந்து பிரிவதாக ஹங்கேரி சுதந்திர பிரகடனம் செய்தது.

1865: அமெரிக்க ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கன் நாடக அரங்கொன்றில் வைத்து துப்பாக்கியால் சுடப்பட்டார். மறுநாள் அவர் உயிரிழந்தார்.

1912: பிரிட்டனின் டைட்டானிக் கப்பல் பனிப்பாறையில் மோதியது. (மறுநாள் இக்கப்பல் மூழ்கியது)



1944: பம்பாய் துறைமுகத்தில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தினால் 300 பேர் பலி.

1979: உகண்டாவில் இடி அமீன் பதவி விலகியதையடுத்து யூசுபு லுலே ஜனாதிபதியாக பதவியேற்றார்.

1986: மேற்கு பேர்லினில் அமெரிக்க படையினர் இருவர் கொல்லப்பட்டதற்கு பதிலடியாக லிபியா மீது குண்டுத்தாக்குதல் நடத்த அமெரிக்க ஜனாதிபதி ரொனால்ட் ரீகன் உத்தரவிட்டார். இத்தாக்குதலில் 60 பேர் பலியாகினர்.

1988: ஆப்கானிஸ்தானிலிருந்து தனது படைகளை வாபஸ் பெறுவதற்கான ஒப்பந்தத்தில் சோவியத் யூனியன் கையெழுத்திட்டது.

1999: அல்பேனிய அகதிகள் மீது நேட்டோ படையினர் தவறுதலாக தாக்குதல் நடத்தியதில் சுமார் 75 பேர் பலி.

2002: வெனிசூலா ஜனாதிபதி ஹியூகோ சாவேஸ் 2 நாட்கள் பதவியிலிருந்து விலகியிருந்தபின் மீண்டும் ஆட்சியைப் பொறுப்பேற்றார்.

2010: சீனாவில் 6.9 ரிச்டர் அளவிலான பூகம்பம் ஏற்பட்டதால் சுமார் 2700 பேர் பலி.

 

 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X