2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

வரலாற்றில் இன்று: ஏப்ரல் 25

Ilango Bharathy   / 2022 ஏப்ரல் 25 , மு.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

1915: முதலாம் உலகப் போர் - கலிப்பொலி போர்த் தொடர் ஆரம்பமானது. ஆஸ்திரியா, பிரித்தானியா, நியூசிலாந்து மற்றும் பிரெஞ்சுப் படைகள், துருக்கியின் கலிப்பொலியை முற்றுகையிட்டன.

1916: அன்சாக் நாள், முதல் தடவையாக நினைவு கூரப்பட்டது.

1945: இரண்டாம் உலகப் போர் - ஜேர்மனியின் ஆக்கிரமிப்பு இராணுவம், வடக்கு இத்தாலியில் இருந்து விலகியது. பெனிட்டோ முசோலினி, கைது செய்யப்பட்டார்.

1945: இரண்டாம் உலகப் போர் - கடைசி நாட்சிப் படையினர், பின்லாந்தில் இருந்து விலகினர்.

1954: முதலாவது செயல்முறை சூரிய மின்கலம், பெல் ஆய்வுகூடத்தில் வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது.

1974: போர்த்துக்கலில், 40 ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சிசெய்த பாசிச அரசு கவிழ்க்கப்பட்டு, மக்களாட்சி ஏற்படுத்தப்பட்டது.

1981: சப்பானின் சுருகா அணுமின் நிலையத்தில், நூற்றுக்கும் அதிகமான தொழிலாளர்கள், கதிர்வீச்சுத் தாக்கத்துக்கு உள்ளாயிகினர்.

1982: காம்ப் டேவிட் ஒப்பந்தத்தின் அடிப்படையில் இஸ்ரேலியப் படைகள் முழுவதுமாக, சினாய் தீபகற்பத்தில் இருந்து வெளியேறியன.

1983: பயணியர் 10 விண்கலம், புளூட்டோ கோளின் சுற்றுப்பாதையைத் தாண்டிச் சென்றது.

1988: இரண்டாம் உலகப் போரில் இழைத்த போர்க்குற்றங்களுக்காக, ஜோன் டெம்ஜானுக் என்பவருக்கு, இஸ்ரேல், மரண தண்டனை விதித்தது.

2005: இத்தாலிய ஆக்கிரமிப்பாளர்களால், 1937இல் களவாடப்பட்ட 1700 ஆண்டுகள் பழமையான சதுர நினைவுத்தூபியின் கடைசித் துண்டு, எத்தியோப்பியாவுக்குக் கொண்டுவரப்பட்டது.

2005: பல்கேரியா, ருமேனியா என்பன, ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைந்தன.

2006: கொழும்பிலுள்ள இராணுவத் தலைமையகத்தில், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தால் நடத்தப்பட்ட தற்கொலைப் படைத் தாக்குதலில், இராணுவத் தளபதி சரத் பொன்சேகா படுகாயமடைந்ததுடன், இராணுவத்தினர் ஐவர் உயிரிழந்தனர்.

2015: நேபாளத்தில் ஏற்பட்ட 7.8 ரிஷ்டர் அளவு நிலநடுக்கத்தால், 9,100 பேர் உயிரிழந்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .