2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

வரலாற்றில் இன்று: ஒக்டோபர் 02

Ilango Bharathy   / 2021 ஒக்டோபர் 02 , மு.ப. 08:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

1187: ஜெருசலேம் நகரம் சலாடினினால் கைப்பற்றப்பட்டது.

1869: மகாத்மா காந்தி பிறந்தார்.

1941: மொஸ்கோ மீது ஜேர்மனி பாரிய தாக்குதலை ஆரம்பித்தது.

1944: வார்ஸோ எழுச்சியை அடக்கி, போலந்தை ஹிட்லரின் நாஸிப் படைகள் கைப்பற்றின.

1964: புகைத்தலினால் புற்றுநோய் ஏற்படுமென விஞ்ஞானிகள் முதன்முதலாக அறிவித்தனர்.

1967: அமெரிக்காவின் உயர்நீதிமன்ற இணை நீதிபதியாக முதலாவது ஆபிரிக்க அமெரிக்கரான துர்ஹூட் மார்ஸல் பதவியேற்றார்.

1968: மெக்ஸிகோவில் ஒலிம்பிக் போட்டிகள் சில தினங்களில் ஆரம்பிக்கவிருந்த நிலையில் நடந்த வன்முறையில் குறைந்தபட்சம் 25 பேர் பலி.

1970: அமெரிக்காவின்; விசிட்டா மாநில பல்கலைக்கழக கால்பந்தாட்ட அணி நிர்வாகிகள், ஆதரவாளர்களை ஏற்றிச் சென்ற விமானம் விபத்துக்குள்ளானதில் 31 பேர் பலி.

1972: சொச்சி - கருங்கடலுக்கு அருகில் இடம்பெற்ற விமான விபத்தில் 105பேர் பலி.

1975: தமிழக முன்னாள் முதலமைச்சர் காமராஜர் காலமானார்.

1990: சைனீஸ் எயார்லைன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான விமானமொன்று குவாங்ஸு விமான நிலையத்தில் கடத்தப்பட்டு வேறு இரு விமானிகளுடன் மோதியதில் 132 பேர் பலி.

1993: ரஷ்யாவில் தீவிர கம்யூனிஸ்ட் ஆதரவு ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் ஜனாதிபதி பொரிஸ் யெல்ட்சினுக்கு ஆதரவான படைகளுக்கும் இடையில் நடந்த மோதலில் 25 பொலிஸார் 5 ஆர்ப்பாட்டக்காரர்கள் பலி.

1996: இலத்திரனியல் தகவல் சுதந்திர சட்டத்திருத்தத்தில் அமெரிக்க ஜனாதிபதி பில் கிளிண்டன் கையெழுத்திட்டார்.

1997: ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆம்ஸ்டர்டாம் உடன்படிக்கை கையெழுத்திடப்பட்டது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .