Janu / 2025 ஒக்டோபர் 21 , மு.ப. 01:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
1512: புரட்டஸ்தாந்து மத ஸ்தாபகர் மார்ட்டின் லூதர், ஜேர்மனியின் விட்டன்பர்க் பல்கலைக்கழகத்தில் இணைந்தார்...
1512: புரட்டஸ்தாந்து மத ஸ்தாபகர் மார்ட்டின் லூதர், ஜேர்மனியின் விட்டன்பர்க் பல்கலைக்கழகத்தில் இணைந்தார்.
1520: பேர்டினான்ட் மகலன் தென் அமெரிக்காவில் அத்திலாந்திக் பசுபிக் சமுத்திரங்களை இணைக்கும் மகலன் நீரிணை என அறியப்பட்ட நீரிணையை கண்டுபிடித்தார்.
1805: நெப்போலிய யுத்தத்தில், ஆங்கிலேயே தளபதி நெல்சன் தலைமையிலான படைகள் பிரெஞ்சு, ஸ்பானிய கூட்டுப்படைகளை ஸ்பானிய கரையோரத்தில் தோற்கடித்தன.
1805: ஆஸ்திரிய ஜெனரல் மெக் தனது படைகளை நெப்போலியனின் படைகளிடம் சரணடையச்செய்தார். 30 அயிரம் படையினர் கைது செய்யப்பட்டனர்.
1816: மலேஷியாவின் பெனாங் ஜோர்ஜ் டவுனில் வண. ஹட்சிங்ஸினால் இலவச பாடசாலையொன்று ஆரம்பிக்கப்பட்டது. தென்கிழக்கு ஆசியாவின் மிகப் பழைமையான ஆங்கில மொழிப்பாடசாலை இதுவாகும்.
1824: போரட்லண்ட் சீமெந்துக்கு ஜோசப் அஸ்பிடின் காப்புரிமைசெய்தார்.
1854: புளோரன்ஸ் நைட்டிங்கேலும் மேலும் 38 தாதிகளும் கிறீமியன் யுத்த களத்திற்கு சேவைக்காக அனுப்பப்பட்டனர்.
1945: பிரான்ஸில் பெண்களுக்கு முதல்தடவையாக வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர்.
1959: விண்வெளிப்பயண முன்னோடியான வார்னர் வொன் பிரவுன் உட்பட ஜேர்மன் விஞ்ஞானிகள் பலர் அமெரிக்க இராணுவத்திலிருந்து நாஸா நிறுவனத்திற்கு ஜனாதிபதி டி.ஐஸனோவரினால் மாற்றப்பட்டனர்.
1933 லீக் ஒவ் நேசனிலிருந்து அடோல்வ் ஹிட்லர் தலைமையிலான ஜேர்மனி விலகியது.
1944: முதலாவது கமிகாஸ் தாக்குதல்: ஜப்பானிய விமானமொன்றின் மூலம் எச்.எம்.ஏ.எஸ். அவுஸ்திரேலியா கப்பல்;மீது குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது.
1967: வியட்நாம் யுத்தத்திற்கு எதிராக அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஒரு லட்சம் பேர் கலந்துகொண்டனர்.
1969: சோமாலியாவில் இடம்பெற்ற சதிப்புரட்சியை அடுத்து சயீட் பாரே ஆட்சியைக் கைப்பற்றினார்.
1983: மீற்றர் அளவு, 7 ஆவது நிறுவை- அளவை மாநாட்டில் நிர்ணயம் செய்யப்பட்டது. வெற்றிடத்தில் 1/299,792,458 பங்கு விநாடியில் ஒளி பயணம் செய்யும் தூரமே ஒரு மீற்றர் என அங்கீகரிக்கப்பட்டது.
1987: யாழ் வைத்தியசாலையில் இந்திய அமைதிப் படையினரால் 70 தமிழ்பொதுமக்கள், மருத்துவர்கள், தாதிகள், ஊழியர்கள் படுகொலை செய்யப்பட்டனர்
1994: வடகொரியா, அணுவாயுத சோதனைகளை நிறுத்துவத்றகும் தனது அணுசக்தித் திட்டங்களை பார்வையிடப்படுவதற்கும் இணங்கி, அமெரிக்காவுடன் ஒப்பந்தமொன்றில் கையெழுத்திட்டது.
1994: தென்கொரியாவின் சியோல் நகரில் பாலமொன்று இடிந்து வீழ்ந்து 32 பேர் பலி.
5 minute ago
17 minute ago
31 minute ago
44 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
17 minute ago
31 minute ago
44 minute ago