2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

வரலாற்றில் இன்று: ஒக்டோபர் 23

Ilango Bharathy   / 2021 ஒக்டோபர் 23 , மு.ப. 07:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

1906 : அல்பேர்ட்டோ சாண்டோஸ் - டூமொண்ட் பாரிஸ் நகரில் ஐரோப்பாவின் முதலாவது வானூர்தியைப் பறக்கவிட்டார்.

1911 : முதற்தடவையாக வானூர்தி ஒன்று போரில் பயன்படுத்தப்பட்டது. இத்தாலிய வானோடி லிபியாவில் இருந்து புறப்பட்டு துருக்கிய இராணுவ நிலைகளை அவதானித்தான்.

1912 : முதலாம் பால்க்கன் போர் - செர்பியாவுக்கும் உதுமானியப் பேரரசுக்கும் இடையில் குமனோவோ என்ற இடத்தில் போர் ஆரம்பமானது.

1915 : நியூயோர்க் நகரில் 25,000 – 33,000 வரையான பெண்கள் வாக்குரிமை கோரிப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

1917: லெனின் அக்டோபர் புரட்சிக்கு அழைப்பு விடுத்தார்.

1929 : 1929 வால் வீதி வீழ்ச்சி -  பங்குச்சந்தை விலைகளில் பெரும் வீழ்ச்சி ஏற்பட்டதை அடுத்து, நியூயார்க் பங்குச் சந்தை வீழ்ச்சியடையத் தொடங்கியது.

1941 : இரண்டாம் உலகப் போர் - மாஸ்கோவை நாட்சி ஜேர்மனி கைப்பற்றுவதைத் தடுக்கும் பொருட்டு சோவியத் இராணுவத் தளபதி கியோர்கி சூக்கொவ் செஞ்சேனைக்குத் தலைமை ஏற்றார்.

1942 : இரண்டாம் உலகப் போர் - இரண்டாம் அல்-அலமைன் சண்டை - வடக்கு எகிப்தில்,  பிரித்தானியாவின் எட்டாவது இராணுப் படைகள் பெர்னார்ட் மோண்ட்கோமரி தலைமையில் எகிப்தில் இருந்து அச்சு இராணுவத்தினரை வெளியேற்ற போர் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

1942 : அமெரிக்க வான்படையின் தாக்குதலுக்கு அமெரிக்கப் பயணிகள் விமானம் ஒன்று இலக்கானதில் அதில் பயணம் செய்த  12 பேரும் கொல்லப்பட்டனர்.

1944 : இரண்டாம் உலகப் போர் - வரலாற்றின் மிகப்பெரும் கடற்படைப் போர் பிலிப்பீன்சில் ஆரம்பமாயிற்று.

1946 :  ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் முதலாவது கூட்டத்தொடர் நியூயோர்க் நகரில் ஆரம்பமாயிற்று.

1955 : பிரதமர் நியோ டின் டியெம் முன்னாள் பேரரசர் பாவோ டையை பொது வாக்கெடுப்பில் தோற்கடித்து தென் வியட்நாமை அமைத்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .