2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

வரலாற்றில் இன்று: ஓகஸ்ட் 20

Ilango Bharathy   / 2021 ஓகஸ்ட் 20 , மு.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

636: காலித் இபின் அல் வலித் தலைமையிலான அரேபிய படைகள் சிரியா, பலஸ்தீன் பிராந்தியங்களi பைஸான்டைன் பேரரசிடமிருந்து கைப்பற்றின.

1858: சார்ள்ஸ் டார்வின் இயற்கைத் தேர்வுமூலமான கூர்ப்புக்கொள்கையை வெளியிட்டார்.

1866:அமெரிக்க சிவில் யுத்தம் முடிவுற்றதாக அமெரிக்க ஜனாதிபதி அன்ட்ரூ ஜக்ஸன் அறிவித்தார்.

1940: சோவியத் செஞ்சேனையின் ஸ்தாபகத் தலைவரான லியோன் ட்ரொஸ்கி, மெக்ஸிகோவில் ஸ்டாலினின் முகவர் ஒருவரினால் தாக்கப்பட்டு படுகாயமடைந்தார்.

1988: 8 வருடகால ஈரான் - ஈராக் யுத்தத்திற்குப் பின் சமாதான உடன்படிக்கைக்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டது.

1991: சோவியத் ஜனாதிபதி மிகைல் கொர்பசேவுக்கு எதிரான சதிப்புரட்சிக்கு எதிர்ப்புத் தெரிவித்து சோவியத் நாடாளுமன்றத்திற்கு வெளியே சுமார் ஒரு லட்சம் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு நாடாளுமன்ற கட்டித்தை தாக்கினர்.

ஆப்கானிஸ்தான், சூடானில் அல் கயீடான நிலைகள் என சந்தேகிக்கப்பட்ட இடங்கள் மீது அமெரிக்கா ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது.

2002: ஸ்பெய்னில் விமானமொன்று விபத்துக்குள்ளானதால் 146 பேர் பலி.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .