2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

வரலாற்றில் இன்று : ஓகஸ்ட் 30

Ilango Bharathy   / 2021 ஓகஸ்ட் 30 , மு.ப. 07:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

1799: நெதர்லாந்து கடற்படைக் கப்பல்கள் அனைத்தும பிரித்தானிய கடற்படையினால் கைப்பற்றப்பட்டன.

1918: சோவியத் போல்ஸ்விக் தலைவர் விளாடிமிர் லெனின் துப்பாக்கியால் சுடப்பட்டு காயமடைந்தார.

1945: ஜப்பானிடமிருந்து ஹொங்கொங்கை பிரித்தானிய படைகள் கைப்பற்றின.

1963: சோவியத் யூனியன் - அமெரிக்காவுக்கு இடையிலான துரித தொலைபேசி இணைப்பு அமுலுக்கு வந்தது.

1974: யூகோஸ்லாவியாவில் ரயில் விபத்தினால் 153 பேர் பலி.

1981: ஈரானிய ஜனாதிபதி மொஹமட் அலி ராஜை, பிரதமர் ஜவாட் பஹோனார் ஆகியோர் பதவியேற்று சில நாட்களேயான நிலையில் 'ஈரானிய மக்கள் முஜாஹிதீன்' அமைப்பின் குண்டுத் தாக்குதலில் பலியாகினர்.

1982: 10 வருடகாலமாக லெபனானிலிருந்த பலஸ்தீன விடுதலை இயக்கத்தின்  தலைமையகத்தில் தங்கிருந்த யஸீர் அரபாத் அங்கிருந்து வெளியேற நிர்ப்;பந்திக்கப்பட்டார்.

1995: பொஸ்னிய சேர்பிய படையினருக்கு எதிராக நேட்டோ படைகள் தாக்குதல்களை ஆரம்பித்தன.

2001: சேர்பிய முன்னாள் ஜனாதிபதி ஸ்லோபோடன் மிலோசவிக் போர்க்குற்றச்சாட்டு விசாரணையை எதிர்கொள்ள வேண்டும் என சரவ்தேச பேர்க்குற்ற நீதிமன்றினால் அறிவிக்கப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .