2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

வரலாற்றில் இன்று: செப்டெம்பர் 14

Ilango Bharathy   / 2021 செப்டெம்பர் 14 , மு.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

1812: நெப்போலியனின் படையெடுப்பின்போது ரஷ்ய துருப்புகள் வெளியேறியவுடன் மொஸ்கோ நகரில் பாரிய தீ பரவ ஆரம்பித்தது.

1829: ரஷ்ய – துருக்கி யுத்தம் முடிவுற்றது.

1901: செப்டெம்பர் 6 ஆம் திகதி துப்பாக்கி தாரியொருவரால் சுடப்பட்டு காயமடைந்த அமெரிக்க ஜனாதிபதி வில்லியம் மெக்கின்லே உயிரிழந்தார்.

1917: ரஷ்யா குடியரசாகியது.

1959: சோவியத் யூனியனின் லூனா -2 விண்காலம் சந்திரனின் தரையில் மோதியது. சந்திரனை அடைந்த மனிதனால் தயாரிக்கப்பட்ட முதலாவது பொருள் இதுவாகும்.

1960: ஒபெக் அமைப்பு ஸ்தாபிக்கப்பட்டது.

1960: கொங்கோவில் சி.ஐ.ஏ. உதவியுடன் இராணுவப் புரட்சி இடம்பெற்றது.

1979: ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி நூர் மொஹமட் தராக்கி படுகொலைசெய்யப்பட்டார்.

1982: லெபனானின் ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டிருந்த பாசிர் ஜெமயாயெல் படுகொலை செய்யப்பட்டார்.

1984: ஜோ கிட்டிங்கர்  என்பவர் அத்திலாந்திக் சமுத்திரத்தை வெப்ப வாயு பலூனில் கடந்த முதலாவது நபரானார்.

2008: ரஷ்யாவில் இடம்பெற்ற விமான விபததில் 88 பேர் பலி.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .