2024 ஏப்ரல் 18, வியாழக்கிழமை

வரலாற்றில் இன்று: ஜனவரி 11

Ilango Bharathy   / 2022 ஜனவரி 11 , மு.ப. 12:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

1569 – முதலாவது குலுக்கல் பரிசுச் சீட்டு இங்கிலாந்தில் பதிவாகியது.

1571 – அவுஸ்திரேலியாவில் உயர்குடியினருக்கு சமயச் சுதந்திரம் வழங்கப்பட்டது.

1693 – சிசிலியில் எட்னா எரிமலை வெடித்ததையடுத்து இடம்பெற்ற பெரும் நிலநடுக்கம் சிசிலி மற்றும் மால்ட்டாவின் பல பகுதிகளை அழித்தது.
1779 – மணிப்பூரின் மன்னராக சிங்-தாங் கோம்பா முடிசூடினார்.

1787 – யுரேனசின் டைட்டானியா, ஒபரோன் ஆகிய இரண்டு சந்திரன்களை வில்லியம் எர்செல் கண்டுபிடித்தார்.

1805 – அமெரிக்காவில் மிச்சிகன் குடியேற்றம் அமைக்கப்பட்டது.

1851 – சீனாவில் குயிங் அரசிற்கெதிராக ஹொங் க்சியூகான் என்பவர் தலைமையில் தாய்பிங் என்ற இராணுவக் குழு ஆரம்பிக்கப்பட்டது.

1861 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: அலபாமா ஐக்கிய அமெரிக்காவில் இருந்து விலகியது.

1863 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: டெக்சஸ் அருகே அலபாமா என்ற கப்பல் ஆட்டரசு என்ற கப்பலை மோதி மூழ்கடித்தது.

1879 – ஆங்கில-சூலூ போர் ஆரம்பமானது.

1911 – காம்ரேட் என்ற பத்திரிகையை விடுதலைப் போராட்ட வீரர் மௌலானா முகம்மது அலி கல்கத்தாவில் வெளியிட ஆரம்பித்தார்.

1922 – நீரிழிவுக்கு மருந்தாக மனிதரில் இன்சுலின் முதன்முதலில் பயன்படுத்தப்பட்டது.

1923 – முதலாம் உலகப் போரில் ஏற்பட்ட இழப்பீடுகளைப் பெறும் பொருட்டு பிரான்சு, பெல்ஜியம் ஆகிய நாடுகளின் படையினர் செருமனியின் ரூர் பகுதியைக் கைப்பற்றினர்.

1935 – அவாயில் இருந்து கலிபோர்னியா வரை தனியாகப் பறந்த முதல் மனிதர் என்ற சாதனையை அமேலியா ஏர்ஃகாட் பெற்றார்.

1942 – இரண்டாம் உலகப் போர்: சப்பானியர் டச்சு கிழக்கிந்தியாவின் போர்ணியோவில் தரக்கான் தீவைக் கைப்பற்றினர்.

1942 – இரண்டாம் உலகப் போர்: ஜப்பான் கோலாலம்பூரைக் கைப்பற்றியது.

1946 – கம்யூனிசத் தலைவர் என்வர் ஓக்சா அல்பேனியாவின் அரசுத் தலைவராகத் தன்னை அறிவித்து அதனைக் குடியரசாக்கினார்.

1957 – ஆப்பிரிக்க உடன்பாடு டக்கார் நகரில் எட்டப்பட்டது.

1962 – பனிப்போர்: சோவியத் நீர்மூழ்கி பி-37 தீப்பிடித்து அழிந்தது.

1962 – பெருவில் இடம்பெற்ற சூறாவளி காரணமாக 4,000 பேருக்கு மேல் இறந்தனர்.

1966 – இந்திய-பாக்கித்தான் போரை முடிவுக்குக் கொண்டு வந்த தாஷ்கந்து வட்டமேசை மாநாட்டில் கலந்துகொண்ட இந்தியப் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி தாசுக்கந்து நகரில் மாரடைப்பால் காலமானார்.

1972 – கிழக்குப் பாக்கிஸ்;தான் வங்காளதேசம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

1994 – அயர்லாந்து அரசு ஐரியக் குடியரசு இராணுவம், மற்றும் அதன் அரசியல் அமைப்பான சின் பெயின் ஆகியவற்றின் ஒலிபரப்புகள் மீதான 15-ஆண்டுகள் தடையை நீக்கியது.

1998 – அல்ஜீரியாவில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.

2007 – செயற்கைக் கோள் தகர்ப்பு ஏவுகணைச் சோதனையை சீனா நடத்தியது.

2013 – சோமாலியாவில் பணயக் கைதியாக வைக்கப்பட்டிருந்த பிரெஞ்சு நபர் ஒருவரை விடுவிக்க எடுத்த முயற்சியில் ஒரு பிரெஞ்சுப் படைவீரரும், 17 தீவிரவாதிகளும் கொல்லப்பட்டனர். ஆனாலும் இம்முயற்சி வெற்றியளிக்கவில்லை.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .