2024 மார்ச் 28, வியாழக்கிழமை

வரலாற்றில் இன்று: ஜூன் 27

Ilango Bharathy   / 2021 ஜூன் 27 , மு.ப. 05:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

1806: ஆர்ஜென்டீனாவின் புவனர்ஸ்அயர்ஸ் நகரை பிரித்தானிய படைகள் கைப்பற்றின.

1941: ருமேனிய அரசாங்கம், யூதர்களுக்கு எதிரான பாரிய வன்முறை நடவடிக்கைகளை ஆரம்பித்தது. இதனால் 13266 யூதர்கள் கொல்லப்பட்டனர்.

1950: கொரிய யுத்தத்திற்கு துருப்புகளை அனுப்ப அமெரிக்கா தீர்மானித்தது.

1954: உலகின் முதலாவது அணுமின் நிலையம் சோவியத் யூனியனில் திறக்கப்பட்டது.

1967; உலகின் முதலாவது தன்னியக்க பணப்பரிமாற்ற இயந்திரம் (ஏ.ரி.எம்.) பிரிட்டனின் என்பீல்ட் நகரில் நிறுவப்பட்டது.

1976: பாரிஸுக்கு சென்றுகொண்டிருந்த எயார் பிரான்ஸ் விமானமொன்று பலஸ்தீன விடுதலை இயக்கத்தினரால் கடத்தப்பட்டு உகண்டாவில் தரையிறக்கப்பட்டது.

1986: நிக்கரகுவா கொண்ட்ரா கிளர்ச்pயாளர்களுக்கு உதவியளித்ததன் மூலம் சர்வதேச  சட்டத்தை அமெரிக்கா மீறிவிட்டதாக சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

1991: ஸ்லோவேனியா மாநிலம் சுதந்திரப் பிரகடனம் செய்ததால் அதன்மீது யூகோஸ்லாவியா படையெடுத்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X