Ilango Bharathy / 2021 ஜூலை 20 , மு.ப. 12:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
1944: ஜேர்மனிய சர்வாதிகாரி அடோல்வ் ஹிட்லர் படுகொலை முயற்சியொன்றிலிருந்து தப்பினார்.
1949: இஸ்ரேலும் சிரியாவும் 19 மாத யுத்த்தின் பின்னர் போர்நிறுத்த உடன்படிக்கையில் கையெழுத்திட்டன.
1951: ஜோர்தான் மன்னர் முதலாம் அப்துல்லா ஜெருஸலேமில் தொழுகையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது பலஸ்தீனியர்களால் படுகொலை செய்யப்பட்டார்.
1960: இலங்கையில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க வெற்றிபெற்று பிரதமராக தெரிவானார். உலகின் முதலாவது பெண் பிரதமர் இவராவார்.
1974: சைப்பிரஸ் மீது துருக்கி படையெடுத்தது.
1976: அமெரிக்காவின் வைக்கிங் விண்கலம் செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கியது.
1980: ஜெருஸலேமை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரிக்கக்கூடாது எனும் தீர்மானத்தை ஐ.நா. பாதுகாப்புச் சபை 14-0 வாக்குகளால் அங்கீகரித்தது.
1989: பர்மாவில் எதிர்க்கட்சித் தலைவி ஆங் சான் சூ கி வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார்.
1996: ஸ்பெயினில் விமான நிலையத்தில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதலில் 35பேர் கொல்லப்பட்டனர்.
7 hours ago
06 Nov 2025
06 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
06 Nov 2025
06 Nov 2025