R.Tharaniya / 2025 டிசெம்பர் 09 , பி.ப. 04:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
536 – பைசாந்தியத் தளபதி பெலிசாரியசு உரோம் நகரை ஊடுருவினான். கோத்திக்குப் படைகள் தலைநகரை விட்டு வெளியேறின.
1582 – பிரான்சில் கிரெகொரியின் நாட்காட்டி அறிமுகப்படுத்தப்பட்டது. டிசம்பர் 9 இற்குப் பின்னர் நேரடியாக டிசம்பர் 20 இற்கு நாட்காட்டி மாற்றப்பட்டது.
1688 – மாண்புமிகு புரட்சி: ரெடிங் சமரில் வில்லியமின் படைகள் யாக்கோபுவின் படைகளைத் தோற்கடித்தன. இரண்டாம் யேம்சு நாட்டை விட்டு வெளியேறினான்.
1775 – அமெரிக்கப் புரட்சிப் போர்: பிரித்தானியப் படைகள் பெரும் பாலத்தில் நடந்த சமரில் தோல்வியடைந்தன. பிரித்தானியா விரைவில் வர்ஜீனியாவில் இருந்து வெளியேறியது.
1793 – நியூயோர்க் நகரின் முதலாவது நாளிதழ் "தி அமெரிக்கன் மினெர்வா" நோவா வெப்சுடரினால் வெளியிடப்பட்டது.
1828 – இலங்கையில் கண்டி வீதி சுரங்கப் பாதை கட்டி முடிக்கப்பட்டது.
1835 – டெக்சசு இராணுவம் சான் அந்தோனியோவைக் கைப்பற்றியது.
1856 – ஈரானிய நகரம் புசேகர் பிரித்தானிய ஆக்கிரமிப்புப் படைகளிடம் வீழ்ந்தது.
1905 – பிரான்சில் அரசையும் கிறித்தவத் தேவாலயங்களையும் பிரிக்கும் சட்டமூலம் கொண்டுவரப்பட்டது.
1911 – அமெரிக்காவில், டென்னிசி மாநிலத்தில், சுரங்க வெடிப்பில் 84 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
1917 – முதலாம் உலகப் போர்: எருசலேம் போர் (1917): பிரித்தானியர் பாலத்தீனத்தின் எருசலேம் நகரைக் கைப்பற்றினர்.
1922 – போலந்தின் முதலாவது அரசுத்தலைவராக கேப்ரியல் நருத்தோவிட்சு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1931 – இரண்டாவது எசுப்பானியக் குடியரசு அமைக்கப்பட்டது.
1937 – இரண்டாம் சீன-சப்பானியப் போர்: யப்பானியப் படைகள் சீன நகரான நாஞ்சிங்கைத் தாக்கின.
1940 – இரண்டாம் உலகப் போர்: காம்ப்பசு நடவடிக்கை: பிரித்தானிய, மற்றும் இந்தியப் படைகள் இத்தாலியப் படையினரை எகிப்தில் தாக்கினர்.
1941 – இரண்டாம் உலகப் போர்: சீனக் குடியரசு, கியூபா, குவாத்தமாலா, பிலிப்பீன்சு ஆகியன செருமனி, யப்பான் மீது போரை அறிவித்தன.
1946 – இந்திய அரசியலமைப்பை வரைய இந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்றம் முதல் தடவையாகக் கூடியது.
1948 – இனப்படுகொலை குற்றத்தை தடுப்பது, தண்டிப்பது தொடர்பான உடன்படிக்கை ஐநா அவையில் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
1950 – பனிப்போர்: மன்காட்டன் திட்டம் குறித்த தகவலை சோவியத் ஒன்றியத்துக்கு வழங்கிய குற்றத்திற்காக அரி கோல்டு என்பவருக்கு 30 ஆண்டுகால சிறைத்தண்டனையை அமெரிக்க நீதிமன்றம் வழங்கியது.
1953 – ஜெனரல் எலக்ட்ரிக் தனது நிறுவனத்தில் பணியாற்றிய கம்யூனிஸ்டுகள் அனைவரையும் பணிநீக்கம் செய்தது.
1956 – கனடாவின் விமானம் ஒன்று பிரிட்டிசு கொலம்பியாவில் வீழ்ந்ததில் 62 பேர் உயிரிழந்தனர்.
1961 – பிரித்தானியாவிடம் இருந்து தங்கனீக்கா விடுதலை பெற்றது.
1971 – 1971 இந்திய-பாக்கிஸ்தான் போர்: பாக்கித்தானிய பாதுகாப்பை மீறி இந்திய வான்படை இந்தியத் தரைப்படைத் தொகுதியினரைத் தரையிறக்கியது.
1973 – வட அயர்லாந்து அதிகாரப் பகிர்வு தொடர்பான ஒப்பந்தம் பிரித்தானிய, அயர்லாந்து அதிகாரிகளுக்கிடையே கையெழுத்திடப்பட்டது.
1979 – பெரியம்மை தீ நுண்மம் முற்றாக அழிக்கப்பட்டு விட்டதாக உலக சுகாதார அமைப்பு அறிவித்தது. மனித உயிர் கொல்லி நோயொன்று முற்றாக அழிக்கப்பட்டது இதுவே முதலாவதாகும்.
1986 – இந்தியைத் திணிக்கும் அரசியல் சட்ட நகலை எரித்ததற்காக தி.மு.க. தலைவர் மு. கருணாநிதி உள்ளிட்ட 10 தி.மு.க. சட்டப்பேரவை உறுப்பினர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டனர்.
1987 – இசுரேல்-பாலத்தீனப் பிணக்கு: முதலாவது பாலத்தீன எழுச்சி காசாக்கரை, மேற்குக் கரை பகுதிகளில் ஆரம்பமானது.
1992 – அமெரிக்கப் படைகள் சோமாலியாவில் தரையிறங்கின.
1992 – வேல்ஸ் இளவரசர் சார்ல்ஸ், இளவரசி டயானா இருவரினதும் பிரிவினை அறிவிக்கப்பட்டது.
2003 – மாஸ்கோவின் செஞ்சதுக்கத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 6 பேர் கொல்லப்பட்டனர், பல காயமடைந்தனர்.
2006 – மாஸ்கோவின் மருத்துவமனை ஒன்றில் இடம்பெற்ற தீவிபத்தில் சிக்கி 45 பேர் உயிரிழந்தனர்.
2016 – மடகாலித் தற்கொலைத் தாக்குதல்கள்: வடகிழக்கு நைஜீரியாவில் சந்தை ஒன்றில் பள்ளி மாணவிகள் இருவர் நடத்திய தற்கொலைத் தாக்குதலில் 57 பேர் கொல்லப்பட்டனர், 177 பேர் காயமடைந்தனர்.
15 minute ago
21 minute ago
30 minute ago
40 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
21 minute ago
30 minute ago
40 minute ago