Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Janu / 2023 டிசெம்பர் 03 , மு.ப. 01:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
1592 - 'எட்வேர்ட் பொனவென்ச்சர்' என்ற ஆங்கிலக் கப்பல் இலங்கைத் தீவின் காலியை வந்தடைந்தது.
1795 - ஜோன் ஜார்விஸ் யாழ்ப்பாணத்தின் ஆட்சியாளராக நியமிக்கப்பட்டார்.
1854 - அவுஸ்திரேலியாவின் விக்டோரியாவில் பல்லராட் என்ற இடத்தில் தங்கச் சுரங்கத் தொழிலாளர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தின் போது படையினர் சுட்டதில் 20 பேர் கொல்லப்பட்டனர்.
1903 - சேர் ஹென்றி பிளேக் ஆளுநராக நியமனம் பெற்று இலங்கை வந்து சேர்ந்தார்.
1904 - வியாழனின் ஹிமாலியா என்ற சந்திரன், சார்ல்ஸ் டில்லன் பெரின் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது.
1912 - பால்கன் போரை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் பல்கேரியா, கிரேக்க நாடு, மொண்டெனேகிரோ, மற்றும் சேர்பியா ஆகியன துருக்கியுடன் போர் நிறுத்த உடன்பாடு கண்டன.
1917 - 20 ஆண்டுகள் கட்டுமானப் பணியின் பின்னர் கியூபெக் பாலம் திறக்கப்பட்டது.
1944 - கிறீசில் கம்யூனிஸ்டுக்களுக்கும் அரச படைக்கும் இடையில் உள்நாட்டுப் போர் வெடித்தது.
1967 - தென்னாபிரிக்காவின் கேப் டவுனில் கிறிஸ்டியன் பார்னார்ட் தலைமையில் உலகின் முதலாவது இருதய மாற்றுச் சிகிச்சை 53 வயது லூயிஸ் வாஷ்கான்ஸ்கி என்பவர் மீது வெற்றிகரமாக நடத்தப்பட்டது.
1971 - இந்திய-பாகிஸ்தான் போர், 1971: இந்தியா கிழக்கு பாகிஸ்தானை முற்றுகையிட்டது. முழுமையான போர் ஆரம்பித்தது.
1978 - வேர்ஜீனியாவில் பயணிகள் தொடருந்து ஒன்று தடம் புரண்டதில் 6 பேர் கொல்லப்பட்டு 60 பேர் காயமடைந்தனர்.
1984 - இந்திய நகரான போபாலில் யூனியன் கார்பைட் நிறுவனத்தில் இடம்பெற்ற நச்சு வாயுக் கசிவில் 3,800 பொதுமக்கள் உடனடியாகக் கொல்லப்பட்டனர். 150,000-600,000 பேர் வரையில் காயமடைந்தனர். (இவர்களில் 6,000 பேர் வரையில் பின்னர் இறந்தனர்). உலகில் இடம்பெற்ற மிக மோசமான தொழிற்சாலை விபத்து இதுவாகும்.
1997 - நிலக் கண்ணிவெடிகளைத் தயாரிப்பது, மற்றும் பயன்படுத்துவது தடை செய்யும் ஒப்பந்தத்தில் 121 நாடுகள் ஒட்டாவாவில் கையெழுத்திட்டனர். அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகியன இவ்வொப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை.
1999 - செவ்வாய்க் கோளை நோக்கி ஏவப்பட்ட Mars Polar Lande இன் தொடர்புகளை நாசா இழந்தது.
2007 - இலங்கைத் துடுப்பாட்ட அணியின் சுழற் பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் தேர்வுத் துடுப்பாட்டத்தில் 709 இலக்குகளை வீழ்த்தி புதிய உலக சாதனை படைத்தார்.
1992- சர்வதேச ஊனமுற்றோர் தினம் இன்றாகும்.
2 hours ago
14 Sep 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
14 Sep 2025