Mithuna / 2023 டிசெம்பர் 13 , மு.ப. 01:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
1642 – டச்சு நாடுகாண் பயணி ஏபெல் டாஸ்மான் நியூசிலாந்தை அடைந்தார். இவரே நியூசிலாந்தை அடைந்த முதலாவது ஐரோப்பியர்.
1758 – வில்லியம் கோமகன் என்ற ஆங்கிலேயக் கப்பல் வடக்கு அத்திலாந்திக் கடலில் மூழ்கியதில் 360 பேர் உயிரிழந்தனர்.
1888 – யாழ்ப்பாணத்தில் சூறாவளியால் பலத்த சேதம்.
1938 – பெரும் இன அழிப்பு: ஜெர்மன் ஆம்பர்கு நகரில் நியூவென்காம் வதை முகாம் திறப்பு.
1949 – இஸ்ரேலின் சட்டமன்றம் நாட்டின் தலைநகரை எருசலேம் நகருக்கு மாற்ற முடிவெடுத்தது.
1959 – பேராயர் மூன்றாம் மக்காரியோசு சைப்பிரசின் முதலாவது அரசுத் தலைவரானார்.
1977 – அமெரிக்காவின் ஏர் இந்தியானா விமானம் வீழ்ந்ததில் 29 பேர் உயிரிழந்தனர்.
1981 – போலந்தில் இராணுவ ஆட்சி ஏற்படுத்தப்பட்டது.
1982 – தென்மேற்கு ஏமனை 6.0 அளவு நிலநடுக்கம் தாக்கியதில் 2,800 பேர் உயிரிழந்தனர், 1,500 பேர் காயமடைந்தனர்.
1988 – பலத்தீனத் தலைவர் யாசிர் அரஃபாத் ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் உரையாற்றினார்.
1996 – ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளராக கோஃபி அனான் தெரிவுசெய்யப்பட்டார்.
2001 – இந்திய நாடாளுமன்றக் கட்டடம் சன்சத் பவன் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 12 பேர் பலி.
2003 – ஈராக் போர்: முன்னாள் ஈராக் அரசுத் தலைவர் சதாம் உசேன் அவரது சொந்த ஊரான திக்ரித்துக்கு அருகே அமெரிக்கப் படையினரால் கைதுசெய்யப்பட்டார்.
2004 – முன்னாள் சிலி சர்வாதிகாரி அகஸ்தோ பினோசெட் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார்.

2006 – ஊனமுற்றோர் உரிமைகள் சாசனம் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையினால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
2011 – பெல்ஜியத்தில் நத்தார்ச் சந்தை ஒன்றில் தற்கொலைத் தாக்குதல் நடத்தப்பட்டதில் ஆறு பேர் கொல்லப்பட்டனர், 125 பேர் காயமடைந்தனர்.
2016 – ஈழத்து எழுத்தாளரும் நாடகாசிரியரும் வரலாற்றாய்வாளருமான வே. சுப்பிரமணியம் உயிரிழந்தார்.
சிறப்பு நாள்
மோல்ட்டா குடியரசு தினம் (1974)
8 minute ago
20 minute ago
27 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
20 minute ago
27 minute ago