Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 07, புதன்கிழமை
Editorial / 2017 டிசெம்பர் 31 , மு.ப. 11:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
1695: இங்கிலாந்தில் வீட்டு ஜன்னல்களுக்கு வரி அறிமுகப்படுத்தப்பட்டது.
1857: ஒட்டோவாவை கனடாவின் தலைநகராக விக்டோரியா மகாராணியார் தெரிவுசெய்தார்.
1963: மத்திய ஆபிரிக்க குடியரசானது ஸாம்பியா, மாலாவி, ரொடிசியா ஆகிய நாடுகளாக பிரிந்தது.
1986: பியூர்ட்டோ ரிக்கோவில் ஹோட்டலொன்றில் ஏற்பட்ட தீவிபத்தில் 97 பேர் பலி.
1991: சோவியத் யூனியனின் அனைத்து நிறுவனங்களினதும் செயற்பாடுகள் முடிவுக்கு வந்தன.
1992: செக்கஸ்லோவாக்கியா நாடானது செக் குடியரசு, ஸ்லோவாக்கியா என இரு நாடுகளாக பிரிந்தது.
1999: ரஷ்ய ஜனாதிபதி பதவியிலிருந்து பொரிஸ் யெல்ட்சின் இராஜினாமா செய்தார். பிரதமர் விளாடிமிர் புட்டின் பதில் பிரதமராக பதவியேற்றார்.
1999: சிறையிலிருந்த 3 தீவிரவாதிகளை இந்திய அரசாங்கம் விடுவித்ததையடுத்து, இந்தியாவிலிருந்து ஆப்கானிஸ்தானின் கந்தகாருக்கு கடத்திச் செல்லப்பட்ட இந்தியன் எயார்லைன்ஸ் விமானத்தையும் 155 பயணிகளையும் ஹர்கத் உல் முஜாஹிதீன் எனும் அமைப்பைச் சேர்ந்த கடத்தல்காரர்கள் விடுவித்தனர்.
1999: பனாமா கால்வாயை பனாமா அரசாங்கத்திடம் அமெரிக்கா ஒப்படைத்தது.
2004: அக்காலத்தில் உலகின் மிக உயரமான கட்டிடமாக விளங்கிய தாய்பே 101 கட்டிடம் திறந்துவைக்கப்பட்டது.
2006: ஐக்கிய அமெரிக்காவிடம் இரண்டாம் உலகப் போரின் போது பெற்ற கடன்களை ஐக்கிய இராச்சியம் முழுவதுமாக கட்டி முடித்தது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago