Ilango Bharathy / 2021 நவம்பர் 20 , மு.ப. 06:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
1910 : பிரான்சிஸ்கோ மடேரோ மெக்சிகோ அதிபர் போர்பீரியோ டயஸ் என்பவரைப் பதவியில் இருந்து அகற்றிவிட்டதாகவும் தன்னை அதிபராகவும் அறிவித்தார். மெக்சிக்கோ புரட்சியும் ஆரம்பமாயிற்று.
1923 : ஜேர்மனியின் நாணயம் பேப்பியர்மார்க் ரெண்டென்மார்க் ஆக மாற்றப்பட்டது. (1 ரெண்டென்மார்க் 1 திரில்லியன் பேப்பியர்மார்க்)
1936 : எஸ்பானிய அரசியல்தலைவர் ஜோசே அண்டோனியோ பிறிமோ டெ ரிவேரா கொல்லப்பட்டார்.
1940 : இரண்டாம் உலகப் போர் – ஹங்கேரி, ருமேனியா, சிலவாக்கியா ஆகியன அச்சு அணி நாடுகள் அமைப்பில் இணைந்தன.
1945 : நியூரம்பெர்க் தீர்ப்பாயம் - 24 நாட்சி போர்க் குற்றவாளிகளுக்கு எதிரான வழக்கு நியூரம்பெர்க்கில் ஆரம்பமானது.
1947 : இளவரசி எலிசபெத் - இளவரசர் பிலிப் திருமணம் இலண்டனில் இடம்பெற்றது.
1959 : குழந்தைகள் உரிமை சாசனம் ஐக்கிய நாடுகள் அவையில் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
1962 : சோவியத் ஒன்றியம் தனது ஏவுகணைகளை கியூபாவில் இருந்து அகற்றுவதாக வாக்குறுதி அளித்ததை அடுத்து, ஐக்கிய அமெரிக்கா கரிபியன் நாட்டுக்கெதிராக கொண்டுவந்த பொருளாதாரத் தடைகளை திரும்பப் பெற்றுக் கொண்டது. கியூபா ஏவுகணை நெருக்கடி முடிவுக்கு வந்தது.
1977 : ஆறு ஆண்டுகள் சிறைக்குப் பின் இலங்கையின் ஜனதா விமுக்தி பெரமுன தலைவர் றோகண விஜேவீர விடுதலை செய்யப்பட்டார்.
1979 : பெரிய பள்ளிவாசல் கைப்பற்றல் - சவூதி அரேபியா, மெக்காவில் காபா மசூதியைத் தாக்கிய சுணி முஸ்லிம் தீவிரவாதிகள் 6,000 பேரைப் பணயக் கைதிகளாக்கினர். பிரான்சியப் படைகளின் உதவியுடன் இத்தாக்குதல் முறியடிக்கப்பட்டது.
1985 : மைக்ரொசொஃப்ட்டின் விண்டோஸ் 1.0 வெளியிடப்பட்டது.
1988 : ராஜிவ் காந்திக்கும் மிக்கைல் கோர்பசேவுக்கும் இடையே இரு அணு உலைகளைக் கூடங்குளத்தில் அமைப்பது என்ற ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. எனினும் சோவியத் கலைப்பை அடுத்து இத்திட்டம் பின்னர் கைவிடப்பட்டது.
1991 : 19 பேரடங்கிய அமைதிப் பணிக் குழுவுடன் சென்ற அசர்பைஜான் எம்எல்- 8 உலங்கு வானூர்தி ஒன்று ஆர்மீனிய இராணுவத்தினரால் சுட்டு வீழ்த்தப்பட்டது.
1992 : இங்கிலாந்து வின்சர் அரண்மனையில் தீ பரவியதில் பலத்த சேதம் ஏற்பட்டது.
1993 : மகெடோனியாவில் விமானம் ஒன்று வீழ்ந்ததில் 116 பயணிகளில் 115 பேரும் 8 இராணுவ வீரர்களும் உயிரிழந்தனர்.
1994 : அங்கோலா அரசுக்கும் யுனிட்டா தீவிரவாதிகளுக்கும் இடையே சாம்பியாவில் போர் நிறுத்த உடன்பாடு ஏற்பட்டதில், 19 ஆண்டு கால உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்தது. எனினும் அடுத்த ஆண்டு போர் மீண்டும் ஆரம்பமாயிற்று.
1996 : ஆங்காங்கில் அலுவலகக் கட்டடம் ஒன்றில் தீப்பற்றியதில், 41 பேர் உயிரிழந்தனர். 81 பேர் காயமடைந்தனர்.
1998 : பன்னாட்டு விண்வெளி நிலையத்தின் முதலாவது பகுதி சர்யா விண்ணுக்கு அனுப்பப்பட்டது.
1999 : இலங்கையில் மன்னார், மடு தேவாலயம் மீது நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலில் 42 தமிழர்கள் கொல்லப்பட்டனர்.
2015 : மாலியில் தங்குவிடுதி ஒன்றில் இடம்பெற்ற தாக்குதலில் 19 பேர் கொல்லப்பட்டனர்
7 hours ago
9 hours ago
06 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
9 hours ago
06 Nov 2025