Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 06, செவ்வாய்க்கிழமை
S. Shivany / 2020 நவம்பர் 22 , மு.ப. 08:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
1635 – சீனக் குடியரசின் டச்சுக் குடியேற்றப் படைகள் தைவானிய பழங்குடிக் கிராமங்கள் மீது தாக்குதல் நடத்தி தீவின் மத்திய தென் பகுதிகளைத் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தன.
1718 – அமெரிக்காவின் வட கரொலைனாவில், பிரித்தானியக் கடல்கொள்ளைக்காரன் பிளாக்பியர்ட் அரச கடற்படையின் தாக்குதலில் கொல்லப்பட்டான்.
1873 – பிரெஞ்சு நீராவிக் கப்பல் இசுக்காட்டியக் கப்பலுடன் அத்திலாந்திக் பெருங்கடலில் மோதி மூழ்கியதில் 226 உயிரிழந்தனர்.
1908 – அல்பேனிய எழுத்துக்கள் அறிமுகப்படுத்தப்பட்டது.
1922 – துட்டன்காமுன் என்ற எகிப்திய பாரோவின் 3,300 ஆண்டுகளுக்கு முற்பட்ட சமாதி கண்டுபிடிக்கப்பட்டது.
1935 – பசிபிக் பெருங்கடலைத் தாண்டி முதன்முறையாக விமானத் தபால்களை விநியோகிக்கும் பணியில் சைனா கிளிப்பர் என்ற விமானம் கலிபோர்னியாவை விட்டுப் புறப்பட்டது
1940 – இரண்டாம் உலகப் போர்: இத்தாலியரின் ஆக்கிரமிப்பைத் தொடர்ந்து கிரேக்கப் படைகள் அல்பேனியாவுக்குள் நுழைந்து கோரிட்சாவை விடுவித்தன.
1942 – இரண்டாம் உலகப் போர்: செருமனியத் தளபதி பிரீட்றிக் பவுலஸ், ஸ்டாலின்கிராட்டில் தாம் சுற்றி வளைக்கப்பட்டிருப்பதாக இட்லருக்குத் தந்தி மூலம் செய்தி அனுப்பினான்.
1943 – இரண்டாம் உலகப் போர்: அமெரிக்கத் தலைவர் பிராங்க்ளின் ரூசவெல்ட், பிரித்தானியப் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில், சீனத் தலைவர் சங் கை செக் ஆகியோர் எகிப்தின் தலைநகர் கெய்ரோவில் சந்தித்தனர்.
1943 – லெபனான், பிரான்சிடம் இருந்து விடுதலை பெற்றது.
1956 – 16 ஆவது ஒலிம்பிக் விளையாட்டுக்கள் ஆத்திரேலியாவின் மெல்பேர்னில் ஆரம்பமாகின.
1963 – அமெரிக்க அரசுத்தலைவர் ஜான் எஃப். கென்னடி சுட்டுக் கொல்லப்பட்டார். துணைத் தலைவர் லின்டன் பி. ஜான்சன் 36ஆவது அரசுத்தலைவராக நியமிக்கப்பட்டார்.
1974 – ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் பலஸ்தீன விடுதலை இயக்கம் பார்வையாளர் தகுதியைப் பெற்றது.
1975 – பிரான்சிஸ்கோ பிராங்கோவின் மறைவை அடுத்து எசுப்பானியாவின் அரசராக யுவான் கார்லொசு எசுப்பானியாவின் அரசரானார்.
1986 – மைக் டைசன் தனது 20ஆவது அகவையில் குத்துச்சண்டை வாகையாளராகத் தெரிவு செய்யப்பட்டார்.
1989 – மேற்கு பெய்ரூத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் லெபனான் ஜனாதிபதி ரெனே மோவாட் கொல்லப்பட்டார்.
1995 – உலகின் முதலாவது முழுமையான அசைவூட்டத் திரைப்படம் டாய் ஸ்டோரி வெளியானது.
2002 – நைஜீரியாவில் உலக அழகிப் போட்டியாளர்கள் மீது இடம்பெற்ற தாக்குதலில் 100 பேருக்கு மேல் கொல்லப்பட்டனர்.
2003: உலகக்கிண்ணத் றக்பி தொடரின் இறுதிப்போட்டியில் அவுஸ்திரேலியாவை தோற்கடித்து இங்கிலாந்து அணி சம்பியனாகியது.
2005: ஜேர்மனியின் முதலாவது பெண் சான்ஸ்லராக ஏஞ்சலா மார்கெல் பதவியேற்றார்.
2007 – இலங்கை அரசு தமிழர் புனர்வாழ்வுக் கழகத்துக்குத் தடை விதித்தது.
2012 – எட்டு நாட்கள் போருக்குப் பின்னர் காசாக்கரையில் அமாசிற்கும் இஸ்ரேலுக்கும் இடையே போர்நிறுத்தம் அமுலுக்கு வந்தது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
17 minute ago
30 minute ago
58 minute ago