Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Ilango Bharathy / 2021 நவம்பர் 22 , மு.ப. 06:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
1499 – இங்கிலாந்தின் அரசாட்சிக்கு உரிமை கோரிய பேர்க்கின் வோர்பெக், லண்டன் கோபுரத்தில் இருந்து தப்பியோட முற்படும்போது கைதாகி தூக்கிலிடப்பட்டார்.
இவர்; 1497 இல் இங்கிலாந்தின் நான்காம் எட்வேர்டின் மகன் என உரிமை கோரி இங்கிலாந்தை முற்றுகையிட்டவர்.
1510 – இமெரெட்டி இராச்சியம் மீதான (இன்றைய மேற்கு ஜோர்ஜியா) உதுமானியரின் முதலாவது தாக்குதல் ஆரம்பித்தது. உதுமானியப் படைகள் தலைநகர் குத்தாயிசியைக் கைப்பற்றினர்.
1867 – இரண்டு அயர்லாந்தர்களைச் சிறையிலிருந்து வெளியேற்ற உதவியமைக்காக, மூன்று அயர்லாந்து தேசியவாதிகள் இங்கிலாந்து, மான்செஸ்டரில் தூக்கிலிடப்பட்டனர்.
1910 – சுவீடனில் கடைசி மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
1914 – மெக்சிக்கோ புரட்சி: கடைசி அமெரிக்கப் படைகள் மெக்சிக்கோவின் வெரக்குரூசு நகரில் இருந்து வெளியேறியது.
1939 – இரண்டாம் உலகப் போர்: ராவல்பிண்டி என்ற பிரித்தானியக் கப்பல், செருமனியப் போர்க் கப்பல்களினால் தாக்கப்பட்டு மூழ்கடிக்கப்பட்டது.
1940 – இரண்டாம் உலகப் போர்: உருமேனியா அச்சு அணி நாடுகளுடன் இணைந்தது.
1943 – இரண்டாம் உலகப் போர்: தரவா, மாக்கின் பவளத் தீவுகள் அமெரிக்கப் படைகளிடம் வீழ்ந்தன.
1955 – கொக்கோசு (கீலிங்) தீவுகள் ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து ஆத்திரேலியாவுக்கு கைமாறியது.
1959 – பிரெஞ்சு அரசுத்தலைவர் சார்லஸ் டி கோல் ஸ்திராஸ்பூர்க் நகரில் 'ஐரோப்பிய ஒருங்கிணைப்பு' பற்றிய தனது எண்ணங்களைத் தெரிவித்தார்.
1978 –இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் வீசிய கடும் புயலில் ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.
1980 – தெற்கு இத்தாலியில் இடம்பெற்ற 6.9 அளவு நிலநடுக்கத்தினால் 4,800 பேர் வரை உயிரிழந்தனர்.
1990 – ஈழப்போர்: தமிழீழ விடுதலைப் புலிகள் மாங்குளம் இராணுவ முகாம் மீது தாக்குதலை நடத்தி அதனை முழுமையாகக் கைப்பற்றினர்.
1992 – முதலாவது திறன்பேசி, ஐபிஎம் சைமன், லாஸ் வேகஸ் நகரில் அறிமுகப்படுத்தப்பட்டது.
2001 – கணினி குற்றம் தொடர்பான சாசனம் புடாபெஸ்ட் நகரில் கையெழுத்திடப்பட்டது.
2003 – வாரக்கணக்கில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களை அடுத்து, ஜோர்ஜிய அரசுத்தலைவர் எதுவார்து செவர்துநாத்சே பதவி விலகினார்.
2003 –தமிழக பிரபல அரசியல்வாதி முரசொலி மாறன் உயிரிழந்தார்.
2005 – லைபீரியாவின் தலைவராக எலன் ஜான்சன் சர்லீஃப் தெரிவுசெய்யப்பட்டார். ஆப்பிரிக்க நாடொன்றின் முதலாவது பெண் தலைவர் இவராவார்.
2007 – அரியலூர் மாவட்டம் உருவாக்கப்பட்டது.
2011 – அரேபிய வசந்தம்: யெமனில் 11 மாதங்கள் எதிர்ப்புப் போராட்டங்களை அடுத்து, யேமனிய அரசுத்தலைவர் அலி அப்துல்லா சாலி பதவி விலகினார்.
2014 –ஈழத்துப் பேராசிரியர், எழுத்தாளர் செல்வா கனகநாயகம் உயிரிழந்தார்.
2016 – கே. சுபாஷ், தமிழ், இந்தித் திரைப்பட இயக்குநர், திரைக்கதை ஆசிரியர் உயிரிழந்தார்.
29 minute ago
42 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
42 minute ago