Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2025 செப்டெம்பர் 17 , மு.ப. 08:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
நான் தற்போது ஓய்வூதியத்தைக் கொண்டே வாழ்கின்றேன். எனக்கு வேறு எந்த வருமான மூலமும் இல்லை என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
நான் உயிர் வாழும் வரை சுதந்திர கட்சி அங்கத்தவனாகவே இருப்பேன். அரசியலில் இருந்தாலும் இனி செயற்பாட்டு அரசியலில் ஈடுபட மாட்டேன்.
நான் செல்லவுள்ள வீட்டின் நிர்மானப்பணிகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. அவை நிறைவடைந்த பின்னர் வெகு விரைவில் இந்த வீட்டை அரசாங்கத்திடம் ஒப்படைத்துவிட்டுச் செல்வேன்.
இந்த வீட்டிலிருந்து செல்வதில் எனக்கு எந்த கவலையும் இல்லை. முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்ட வீடுகளைத் தவிர மேலும் பல அரசியல்வாதிகளுக்கு வழங்கப்பட்ட வீடுகள் இந்த அரசாங்கத்தால் மீளப் பெறப்பட்டாலும், அவை பயன்பாடின்றி கைவிடப்பட்ட நிலையிலேயே உள்ளன.
தற்போது அவற்றில் குரங்குகள் தான் வாழ்ந்து கொண்டிருப்பதாகவும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரி சுட்டிக்காட்டினார்.
முன்னாள் ஜனாதிபதிகளுக்கான செலவுகள் தொடர்பில் அரசாங்கத்தால் வெளியிடப்பட்டுள்ள தரவுகளை நான் சிறிதளவேனும் கவனத்தில் கொள்ளவில்லை. அவை முற்று முழுதாக போலியான தரவுகளாகும் என்றும், பாதுகாப்பு செலவுகளைக் கூட அவர்கள் எமது செலவாகக் குறிப்பிட்டுள்ளதாகவும் அவர் விசனம் வெளியிட்டார்.
உலகின் ஏனைய நாடுகளில் முன்னாள் ஜனாதிபதிகளுக்கு எவ்வாறான பாதுகாப்புக்களும் கௌரவமும் வழங்கப்படுகிறது என்பதை அரசாங்கத்தினர் பார்க்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். R
24 minute ago
36 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
36 minute ago