Freelancer / 2025 பெப்ரவரி 14 , மு.ப. 10:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
1900 : தென்னாபிரிக்காவில் ஒரேஞ்ச் மாநிலத்தை 20,000 பிரித்தானியப் படைகள் ஆக்கிரமித்தன.
1912 : அரிசோனா 48ஆவது மாநிலமாக ஐக்கிய அமெரிக்காவுடன் இணைந்தது.
1918 : சோவியத் ஒன்றியம் கிரெகொரியின் நாட்காட்டியை ஏற்றுக் கொண்டது (பழைய யூலியன் நாள்காட்டியின் படி பெப்ரவரி 1).
1919 : போலந்து - சோவியத் போர் ஆரம்பமானது.
1924 : ஐ.பி.எம் நிறுவனம் அமைக்கப்பட்டது.
1929 : சிக்காகோவில் வேலண்டைன் நாளன்று அல் கபோனின் எதிராளிகள் ஏழு பேர் படுகொலை செய்யப்பட்டனர்.
1942 : இரண்டாம் உலகப் போர் - சிங்கப்பூரில் பசிர் பஞ்சாங்க் என்ற இடத்தில் ஜப்பானியர்களின் தாக்குதல் ஆரம்பித்தது.
1946 : இங்கிலாந்து வங்கி தேசியமயமாக்கப்பட்டது.
1949 : இஸ்ரேலிய நாடாளுமன்றம் முதல் தடவையாகக் கூடியது.
1956 : சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் இருபதாவது மாநாடு மொஸ்கோவில் ஆரம்பமானது.
1961 : 103ஆவது தனிமம் இலாரென்சியம் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.
1966 : அவுஸ்திரேலியாவில் முன்னர் பயன்பாட்டில் இருந்த அவுஸ்திரேலிய பவுண்டிற்குப் பதிலாக அவுஸ்திரேலிய டொலர் அறிமுகப்படுத்தப்பட்டது.
1979 : ஆப்கானிஸ்தானுக்கான ஐக்கிய அமெரிக்காவின் தூதுவர் அடொல்ஃப் டப்ஸ் காபூலில் கடத்தப்பட்டார். இவர் பின்னர் காவற்றுறையினருக்கும் கடத்தல்காரருக்கும் இடையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சண்டையில் அகப்பட்டு இறந்தார்.
1981 : டப்ளினில் இரவுவிடுதி ஒன்றில் இடம்பெற்ற தீயில் 48 பேர் கொல்லப்பட்டனர்.
1987 : யாழ்ப்பாணம், கைதடியில் இடம்பெற்ற வெடிவிபத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர் பொன்னம்மான் உட்பட ஏழு விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டனர்.
1987 : தமிழீழ விடுதலைப் புலிகளின் நிதர்சனம் தொலைக்காட்சி சேவை யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்டது.
1989 : ஜி.பி.எஸ் திட்டத்தின் 24 செய்மதிகளில் முதலாவது விண்ணில் ஏவப்பட்டது.
1989 : யூனியன் கார்பைட் நிறுவனம் 1984 போபால் பேரழிவுக்காக இந்திய அரசுக்கு 470 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நட்ட ஈடாக வழங்க சம்மதித்தது.
1989 : சாத்தானின் கவிதைகள் நூலை எழுதியதற்காக சல்மான் ருஷ்டிக்கு, ஈரான் தலைவர் ரூகொல்லா கொமெய்னி மரண தண்டனை விதி்த்தார்.
1990 : பெங்களூருவில் இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று வீழ்ந்து விபத்துக்குள்ளாகியதில், 92 பேர் கொல்லப்பட்டு 54 பேர் காயங்களுடன் தப்பினர்.
1990 : வொயேஜர் 1 விண்கலம் பூமியின் படம் ஒன்றை எடுத்தது. இப்படம் பின்னர் வெளிர் நீலப் புள்ளி எனப் பெயர்பெற்றது.
1998 : கோயம்புத்தூர் நகரின் பல இடங்களில் குண்டுகள் வெடித்ததில், 58 பேர் கொல்லப்பட்டனர். 250 பேர் காயமுற்றனர்.
2000 : நியர் சூமேக்கர் என்ற விண்கலம் 433 ஈரோஸ் என்ற சிறுகோளின் சுற்றுவட்டத்துக்குள் பிரவேசித்தது. சிறுகோள் ஒன்றின் சுற்றுக்குள் சென்ற முதலாவது விண்கலம் இதுவாகும்.
2005 : யூடியூப், கல்லூரி மாணவர்கள் சிலரால் முதன் முதலில் வெளியிடப்பட்டது.
2005 : லெபனானின் முன்னாள் பிரதமர் ரஃபீக் அரீரி சுட்டுக் கொல்லப்பட்டார்.
2005 : பிலிப்பைன்சில் மணிலா நகரில் இடம்பெற்ற தொடர் குண்டு வெடிப்புகளில் 7 பேர் கொல்லப்பட்டு, 151 பேர் காயமடைந்தனர்.
2017 : ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கு - தமிழக முன்னாள் முதல்வர் ஜெ. ஜெயலலிதா, வி. கே. சசிகலா உட்பட நான்கு பேர் குற்றவாளிகள் என இந்திய உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

7 minute ago
18 minute ago
33 minute ago
48 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
18 minute ago
33 minute ago
48 minute ago